மாவீரன் படத்திலிருந்து வெளியான சூப்பர் அப்டேட்.! உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…

குறுகிய காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் திரைப்படம் குறித்து ஒரு அப்டேட் வெளியாகி இருக்கிறது இதனால் ரசிகர்கள் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை வைத்திருக்கிறார்கள்.

மெரினா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் சினிமாவில் வருவதற்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் ஆங்கராக இருந்தார் அதன் பிறகு சினிமாவில் வாய்ப்பு கிடைக்க ஒவ்வொரு திரைப்படத்திலும் மெனக்கெட்டு நடித்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருகிறார்.

மேலும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தற்போது சிறுவர் முதல் பெரியவர் வரை பல ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றே சொல்லலாம் அந்த அளவிற்கு தன்னுடைய திரைப்படத்தை நகைச்சுவையாக கொண்டு சேர்த்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன் இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பிரின்ஸ் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று தோல்வியடைந்தது.

இந்த படத்தின் தோல்வியால் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அடுத்த படம் வெற்றி படமாக கொடுத்தால்தான் அவருடைய கஷ்டம் ஓரளவுக்கு நீங்கும் என்று மாவீரன் திரைப்படத்திற்காக மிகவும் மெனக்கெட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடையும் நிலையில் உள்ளதால் இந்த படம் வருகின்ற ஜூன் மாதம் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த படத்தின் டீசர் அல்லது ட்ரைலர் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானதை தொடர்ந்து அதன் பிறகு எந்த ஒரு அப்டேட்டும் வெளியே வராமல் இருக்கும் நிலையில் தற்போது இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் செம்ம வைரல் ஆகி வருகிறது. மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வமாக பட குழு அறிவிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment