வெள்ளை வேட்டியில் ரஜினி வெளியானது அண்ணாத்த அப்டேட்.!

தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு வலம் வருபவர் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான பேட்ட,தர்பார் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று விமர்சனங்கள் ரீதியாகவும் நல்ல விமர்சனத்தை பெற்றுத்தந்தது.

மேலும் ரஜினி அந்த திரைப்படங்களை தொடர்ந்து இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா,கீர்த்தி சுரேஷ், மீனா,குஷ்பு போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் இதில் நடித்து வருகிறார்கள் மேலும் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் சூரி,சதீஷ்,ஜெகபதிபாபு போன்ற பல நடிகர்கள் நடிக்கிறார்கள் இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு அதில் ரஜினியும்,நயன்தாராவும் கலந்து கொண்டனர்.

விறுவிறுப்பாக நடந்து வந்த அண்ணாத்த படப்பிடிப்பு திடீர் என்று நிறுத்தி வைக்கப்பட்டது ஏனென்றால் படபிடிப்பை சேர்ந்த நான்கு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டது இதனால் படம் அப்பொழுது தள்ளி வைக்கப்பட்டது.

இதனையடுத்து மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்நிலையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக ஒரு தகவல் இணையதளத்தில் கசிந்து வைரலாகி வருகிறது அந்த தகவல் என்னவென்றால் அண்ணாத்த படப்பிடிப்பு இன்னும் வருகின்ற மே 10ஆம் தேதியுடன் முடிந்து விட போவதாக தகவல் கிடைத்துள்ளது.

rajini2
rajini2

அதுமட்டுமல்லாமல் மே மாதத்திற்குள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளதாகவும் தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.மேலும் இந்த தகவலை அறிந்த ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் குதித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment