திருப்பதிக்கு குடும்பத்தோடு விசிட் செய்த சூப்பர் ஸ்டார்.. இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

நேற்று ரஜினிகாந்த் தன்னுடைய 75 வது பிறந்த நாளை கொண்டாடினார். அதை முன்னிட்டு படையப்பா ரீ ரிலீஸ் செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் 300 தியேட்டர்களில் வெளியானது.

தமிழ்நாடு மட்டுமல்லாமல் கர்நாடகா உள்ளிட்ட பல இடங்களிலும் படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. அதேபோல் ரஜினிக்கு திரை பிரபலங்கள் அரசியல் பிரபலங்கள் உட்பட ரசிகர்கள் என எல்லோரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று சூப்பர் ஸ்டார் தன் குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்று தரிசனம் செய்துள்ளார். அந்த வீடியோக்களும் போட்டோக்களும் இப்போது சோசியல் மீடியாவை கலக்கி கொண்டிருக்கிறது.

சூப்பர் ஸ்டார் தன் மனைவி மகள்கள் மருமகன் பேரப்பிள்ளைகள் என அனைவரோடும் திருப்பதிக்கு வந்தது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தான். அவரை அங்கு எதிர்பார்க்காத பக்தர்கள் தலைவா என கோஷமிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

சூப்பர் ஸ்டார் அவர்களை பார்த்து சிரித்தபடி கையசைத்து சென்றார். அதேபோல் கோவில் நிர்வாகமும் அவருக்கு தகுந்த மரியாதை கொடுத்தனர்.

மேலும் சுவாமி தரிசனம் முடித்துவிட்டு வெளியில் வந்த சூப்பர் ஸ்டாரை பத்திரிக்கையாளர்களும் ரசிகர்களும் போட்டோ எடுத்து அதை இப்போது வைரல் செய்து வருகின்றனர்.