வசூல் ரீதியாக ரஜினிகாந்தை தோற்கடித்த ராம்கி!! இந்த திரைப்படத்தை தான்…

0

super star rajinikanth vs ramkie: சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இருந்து இன்று வரையிலும் வயதானாலும் கூட கொஞ்சம் கூட மவுசு குறையாமல் திரை உலகில் கொடி கட்டிப் பறந்தவர் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்பொழுது உள்ள இளம் நடிகர்களுக்கும் போட்டியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்த் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இதில் நயன்தாரா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ் உட்பட பல முன்னணி நடிகர் நடிகைகளும் நடித்து வருகிறார்கள்.

இப்படம் அஜித் நடிப்பில் வெளிவர உள்ள வலிமை திரைப்படம் ரிலீஸ் ஆகும்போது அண்ணாத்த திரைப்படமும் ரிலீசாகும் என்று முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில் தல அஜீத் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். எந்த நிலையிலும் இப்படம் இரண்டும் போட்டி போடாது என்றே கூறப்பட்டுள்ளது.

ஏனென்றால் இதற்கு முன்பு ரஜினி நடிப்பில் வெளிவந்த பேட்ட திரைப்படம் மற்றும் தல அஜித் நடிப்பில் வெளிவந்த விசுவாசம் இந்த இரண்டு திரைப்படங்களும் போட்டி போட்டுக் கொண்டு கடைசியில் தல அஜித்தின் திரைப்படமான விசுவாசம் திரைப்படம் தான் மக்கள் மத்தியில் பெரிதும் வெற்றி பெற்றது.

இவ்வாறு இளம் நடிகர்களுக்கு போட்டியாக நடித்து வரும் ரஜினிகாந்த் திரைப்படங்கள் பெரும்பாலும் வசூல் ரீதியாக வெற்றி அடைந்துவிடும். அந்த வகையில் இவரின் பழையமனிதன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்த திரைப்படம். இத்திரைப்படம் ரஜினிகாந்தின் திரை வாழ்க்கை இருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்றே கூறலாம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

இந்தநிலையில் ராம்கி மற்றும் அருண்பாண்டியன் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமான இணைந்த கைகள். இத்திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது இந்தநிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் ரஜினி நடிப்பில் வெளிவந்த மனிதன் திரைப்படத்தை விட ராம்கி நடிப்பில் வெளிவந்த இணைந்த கைகள் திரைப்படம் செங்கல்பட்டு ஏரியாவில் நல்ல வரவேற்ப்பை பெற்று வசூல் ரீதியாக மனிதன் திரைப்படத்தை மிஞ்சி விட்டது என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.