தான் மிகப்பெரிய வசூல் மன்னன் என நிருபிக்க மெஹா ஹிட் இயக்குனருடன் இணையும் சூப்பர்ஸ்டார் ரஜினி.!

0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் படத்தில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் பிஸியாக நடித்து வருகிறார், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் சில பகுதிகளில் நடைபெற்று வருகிறது, இந்த நிலையில் ரஜினி அடுத்ததாக யார் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது,.

சில நாட்களுக்கு முன்பு ரஜினி அடுத்ததாக இந்த இயக்குனருடன் தான் இணையப் போகிறார் என்ற தகவல் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வந்தது இந்த நிலையில் அந்த தகவல் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது, அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் சிறுத்தை சிவா ரஜினியின் அடுத்த படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தர்பார் படத்தில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு கிளம்புவதற்கு முன்பு மோடியின் பதவியேற்பு செல்லவேண்டிய பரபரப்பான சூழ்நிலையில் போயஸ் கார்டன் வீட்டில் விசுவாசம்  பட இயக்குனர் சிறுத்தை சிவாவை தனது இல்லத்தில் ஒரு மணி நேரம் சந்தித்து பேசினார், அப்பொழுது கோடம்பாக்கத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

சிறுத்தை சிவா அடுத்ததாக ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார், அது சில தினத்திற்கு முன்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது, அந்தச் செய்தி வெளியான சில நாட்களிலேயே சிவகர்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் படம் தோல்வி அடைந்ததால், சிறுத்தை சிவா படம் தொடங்குவதில் பண நெருக்கடி ஏற்பட்டுள்ளது ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு என்ற செய்தி வெளியானது.

இப்படி இருக்க சிறுத்தை சிவாவை தனது போயஸ் கார்டனில் ரஜினியை சந்தித்ததால் அனைவரிடமும் பெரும் கேள்வி எழும்பியது, இந்த நிலையில் சிறுத்தை சிவா மற்றும் ரஜினி சந்திப்பில் ரஜினி தனது அடுத்த படத்தை பற்றி பேசியிருப்பதாகவும், அதாவது பேட்ட திரைப்படத்துடன்  விஸ்வாசம் திரைப்படம் மோதி அதகளம் செய்தது, அதனால் அஜித்தை விட தான் மிகப்பெரிய வசூல் மன்னன் என்பதை நிரூபிக்க விஸ்வாசம் டைரக்டரை வைத்தே அடுத்த படத்தில் நடிக்க ரஜினி முடிவு செய்துள்ளதாக சிலர் யூகித்து உள்ளார்கள்.

ரஜினி கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் கேஎஸ் ரவிக்குமார், எச் வினோத், கார்த்திக் சுப்புராஜ் ஆகிய மூன்று இயக்குனர்களிடம்  கதை கேட்டுள்ளார் ஆனால் கடைசியில் அவர் சிவாவைக் தான் தேர்வு செய்துள்ளதாக நெருங்கிய வட்டாரம் தெரிவித்துள்ளது.