சூப்பர் ஸ்டார் ரஜினி பேட்டை திரைப்படத்தை தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வட மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
மேலும் யோகி பாபு, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள், ஏற்கனவே படப்பிடிப்பு தளத்தில் இருந்து பல புகைப்படங்கள் வெளியாகி படக்குழுவை அதிர்ச்சி அடையச் செய்தது அதுமட்டுமில்லாமல் சில வீடியோக்களும் வெளியானது.
இந்த நிலையில் தற்போது தர்பார் திரைப்படத்திலிருந்து செகண்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளது இந்த செகண்ட் லுக் போஸ்டரில் ரஜினி செம மாஸ் லுக்கில் இருக்கிறார் இந்த போஸ்டர் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
