தர்பார் படத்தை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினியின் அடுத்த படத்தின் இயக்குனர்.!

0

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகி பாபு, உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘தர்பார்’. 2020ம் ஆண்டு பொங்கல் வெளியீடு என்பதால் டிசம்பரில் இருந்து தான் விளம்பரப்படுத்தும் பணிகளை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

‘தர்பார்’ படத்தை முடித்துவிட்டு சிவா இயக்கத்தில் நடிக்க முடிவு செய்தார் ரஜினி. ஆனால், சூர்யாவை இயக்க சிவா ஒப்பந்தமாகிவிட்டதால் உடனடியாக ரஜினியை இயக்க அவரால் முடியவில்லை. இதனால், ரஜினியின் அடுத்த பட இயக்குநர் யார்.? என்பது குறித்து குழப்பம் நீடித்தது.

இந்நிலையில், ‘தர்பார்’ படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் அடுத்த படத்தையும் ஏ.ஆர்.முருகதாசே இயக்க பேச்சுவார்த்தைத் தொடங்கப்பட்டுள்ளது. ரஜினியிடம் அவர் சொன்ன கதை மிகவும் பிடித்துவிடவே, அவரும் ஒ.கே சொல்லியிருப்பதாகக் கூறுகிறார்கள்.

அனேகமாக இந்த படம் தர்பார் 2 என்று பெயரிடப்பட்டு அதன் தொடர்ச்சியாகவே இருக்கும். இதிலும் ரஜினி போலீசாகவே தொடர்வார் என்று கூறப்படுகிறது.