சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் மேக்கப்மேன் வேலையை பார்த்த ரஜினிகாந்த்.! இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்.

தமிழ்சினிமாவில் அன்றிலிருந்து இன்றுவரை சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த் இன்றும் இளமையுடன் முன்னணி நடிகர்களை கேட்டப் கொடுக்கும் வகையில் படங்களில் நடித்து வருகிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது இந்த நிலையில் அடுத்த வருடம் இந்த திரைபடத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து பல திரைப்படங்கள் ஹிட் அடித்துள்ளது அந்த வகையில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய படையப்பா திரைப்படம் மெகா ஹிட் அடித்தது இந்த திரைப்படத்தை பிடிக்காது என கூறியவர்கள் கிடையவே கிடையாது. அந்த அளவுக்கு இந்த திரைப்படம் மிகவும் பிரபலம்.

இந்த திரைப்படத்தில் நீலாம்பரியாக ரம்யா கிருஷ்ணன் நடித்த அசத்தியிருப்பார் அவரின் கதாபாத்திரம் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஈடு இணையான கதாபாத்திரம் தான் ரம்யா கிருஷ்ணன்  நீலாம்பரி கதாபாத்திரம்.

படையப்பா திரைப்படத்தை கே எஸ் ரவிக்குமார் தான் இயக்கியிருந்தார் இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது. அதே பல் சிவாஜி கணேசன் அவர்களுக்கு கடைசி திரைப்படமாக அமைந்தது இந்த திரைப்படம் தான், இந்த திரைப்படத்தின் போது எடுக்கப்பட்ட ஒரு சண்டை காட்சியின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டன்ட் இயக்குனர் கனல் கண்ணனுக்கு மேக்கப் மேனாக மாறி கண்ணாடியைக் காட்டியுள்ளார் இந்த புகைப்படம்தான் சமூகவலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

padaiyappa
padaiyappa

Leave a Comment