தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிகை கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள் பரிசாக என்ன கொடுத்துள்ளார் பாருங்கள்!! வைரலாகும் புகைப்படம்.

0

super star mahesh babu gives this gift to actress keerthy suresh birthday photo:நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார் இவருக்கு திரைப்பிரபலங்கள் மட்டும் ரசிகர்கள் என அனைவரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். எனவே இந்த நிலையில் தற்போது பிறந்தநாள் பரிசாக  தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு இவருக்கு சர்க்காரு வாரி பட்டா என்ற படத்தில் தனக்கு ஹீரோயினாக நடிக்க கீர்த்தி சுரேஷுக்கு அழைப்பு ஒன்றை விடுத்துள்ளார்.

இந்த திரைப்படத்தை இயக்குனர் பரசுராம் என்பவர் இயக்குகிறார். மேலும் இந்த திரைப்படம் இசையமைப்பாளர் தமன் இசையில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு போய்க்கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்த படத்திற்கு கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக மகேஷ் பாபு அவர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இவர் ஏற்கனவே தமிழில் அனைத்து முன்னணி நடிகருடன் இணைந்து ஹிட் படங்களை கொடுத்து உள்ள நிலையில் தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடன் இணைந்து நடித்து மிகப்பெரிய அளவில் வளர ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருவது அனைவருக்கும் தெரிந்ததே அதனை தொடர்ந்து தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்க உள்ளது தெரிய வந்ததும் ரசிகர்கள் ஒரே நேரத்தில் இரண்டு சூப்பர் ஸ்டார்களுக்கு நடிக்கும் நடிகை நீங்கள் தான் என பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.