வருங்கால கணவருடன் புகைப்படத்தை வெளியிட்ட சூப்பர் சிங்கர் மாளவிகா.! வைரலாகும் புகைப்படம்.

0

ஒவ்வொரு தொலைக்காட்சியும் டி ஆர் பி யில் முதல் இடத்தை பிடிப்பதற்காக ஏதாவது ரியாலிட்டி ஷோ புதுப்புது சீரியல் என ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் சூப்பர் சிங்கர். இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சீனியர் ஜூனியர் என மாறி மாறி ஒளிபரப்பு செய்து வருகிறார்கள்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியைக் காண்பதற்காக ஒரு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருந்துவருகிறது. இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீசன் ஒன்றிலிருந்து 7 வரை வெற்றிகரமாக முடிந்துவிட்டது இந்தநிலையில் 8வது சீசன் கோலாகலமாக துவங்கிய தற்பொழுது பைனல் வரை சென்று விட்டது. இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் மாளவிகா.

இவர் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தற்போது புகைப்படத்தின் மூலம் அறிவித்துள்ளார். இந்த தகவல் சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. மாளவிகா சுந்தர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் இவர் பாடும் பாடலுக்காகவே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது இந்த நிலையில் இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

malavika super singer
malavika super singer

இவர் தமிழில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது போல் ஹிந்தியிலும் ஒரு பாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பைனல் வரை சென்று விட்டார். ஆனால்  மாளவிகா அந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற முடியவில்லை. இந்த நிலையில் சமூக வளைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவார்.

அப்படி இருக்கும் வகையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னைப்பற்றி தவறாக மெசேஜ் செய்த ஒருவரைப் பற்றி கூறியிருந்தார். மேலும் தற்பொழுது  மாளவிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சந்தோஷமான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்ற தகவலைக் கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தான் திருமணம்  செய்துகொள்ளப்போகும் வருங்கால கணவருடன் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் இதோ அந்த புகைப்படம்.

malavika super singer
malavika super singer