உலகக் கோப்பையை வெல்ல காரணமாக இருந்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் ஆறு வருடங்களுக்கு முன்பே இது போல் நடக்கும் என ட்வீட் செய்துள்ளது தற்பொழுது வைரலாகி வருகிறது.
நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியும் மோதிக்கொண்டன, இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 241 ரன்கள் எடுத்திருந்தது அடுத்ததாக களமிறங்கிய இங்கிலாந்து அணி அதேபோல் 50 ஓவர் முடிவில் 241 ரன்கள் எடுத்து மேட்சை டை செய்தது, இதனால் சூப்பர் ஓவர் கொண்டுவரப்பட்டது அதிலும் இங்கிலாந்து அணியை மற்றும் நியூசிலாந்து அணி சமமாக 15 ரன்கள் அடித்ததால் இந்த சூப்பர் ஓவர் முடியும் டிரா ஆனது, அதனால் அதிக பவுண்டரி அடித்த இங்கிலாந் அணியை வெற்றி பெற்றதாக அறிவித்தார்கள்.

இந்த போட்டியில் கடைசி ஓவரை வேகப்பந்துவீச்சாளர் இங்கிலாந்து அணி சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர் தான் வீசினார், அவர்தான் இங்கிலாந்து அணி வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது, நிலையில் இந்த உலக கோப்பை முடிவை 2013 இல் இது போல் நடக்கும் என கணித்துள்ளார் ஜோப்ரா ஆர்ச்சர், இந்த ட்வீட் இணையதளத்தில் வைரலாகி வருகிறது, அதில் 2013ஆம் ஆண்டு ஆறு பாலுக்கு 16 ஓட்டங்கள் தேவைப்படும் இந்த போட்டியிலும் நியூசிலாந்து தோற்றுவிடும் இது என்னடா கேவலமான ரூல்ஸ் என கூறுவார்கள் என பதிவிட்டுள்ளார்.

இந்த ட்வீட் பழைய ட்வீட் ஆக இருப்பதால் ஜோப்ரா ஆர்ச்சர் டைம் டிராவல் செய்து வந்திருப்பார் என கிண்டல் செய்து வருகிறார்கள். ஒரு சிலரோ அப்படியே எங்கள் வாழ்க்கையை பற்றி சொல்லுங்கள் என கிண்டல் அடித்து வருகிறார்கள்.

