ரசிகர்களை காதலில் மூழ்கடித்த பதினாறு திரைப்படங்கள்.!

0

தமிழ் சினிமாவில் வெளிவந்த சில திரைப்படங்கள் வெளிவந்து பல ஆண்டுகள் ஆனாலும் எப்பொழுதும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் அது மட்டுமல்லாமல் எத்தனை முறை பார்த்தாலும் போர்ரடிக்காமல் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் திரைப்படங்கள் உள்ளது.

அந்தவகையில் இதுவரையிலும் ரசிகர்கள் மத்தியில் தமிழில் முழுக்க முழுக்க காதலை மட்டுமே மையமாக வைத்து எடுக்கப்பட்டு இளசுகள் மத்தியில் தற்போது வரையிலும் பிரபலமாக உள்ள 16 திரைப்படங்களில் லிஸ்டை தற்பொழுது பார்ப்போம். அந்த வகையில் முதலாவதாக,

காதலுக்கு மரியாதை: இத்திரைப்படத்தில் தளபதி விஜய் மற்றும் ஷாலினி இருவரும் இணைந்து நடித்திருந்தார்கள்.  இத்திரைப்படம் 1997ஆம் ஆண்டு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இத்திரைப்படம் இயக்குனர் பாசில் இயக்கத்தில் உருவானது.

காதல் கோட்டை : இத்திரைப்படத்தில் தல அஜித் மற்றும் தேவயானி இருவரும் நடித்திருந்தார். 1996ஆம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படத்தை அகத்தியன் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் கொஞ்சம் வித்தியாசமாக இருந்ததால் ரசிகர்கள் தங்கள் பேராதரவை அளித்திருந்தார்கள்.

மௌன ராகம் :80 காலகட்டத்தில் முன்னணி நடிகர் மற்றும் நடிகையாக கலக்கி வந்த ரேவதி மற்றும் கார்த்திக் இவர்களின் நடிப்பில் வெளிவந்தது. இத்திரைப்படத்தை 1986ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் உருவானது.

ஜில்லுனு ஒரு காதல்: இத்திரைப்படத்தில் முன்னணி நடிகரான சூர்யா நடிகை ஜோதிகா, பூமிகா சாவ்லா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்தார்கள்.இத்திரைப்படம் 2006ஆம் ஆண்டு வெளிவந்தது இத்திரைப்படத்தை கிருஷ்ணா இயக்கியிருந்தார்.

அலைபாயுதே : இதுவரையும் பார்த்த திரைப்படங்களை விட இத்திரைப்படம் தான் ரொமான்ஸ், காதல் என்று இளசுகள் மத்தியில் சூப்பர் ஹிட் அடித்தது. இத்திரைப்படம் 2012ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மாதவன் இவருக்கு ஜோடியாக ஷாலினி நடித்திருந்தார்.

சேது : இத்திரைப்படம் விக்ரம் நடிப்பில் வெளிவந்தது. இத்திரைப்படத்தை சேது இயக்கி இருந்தார். அந்தவகையில் 1999ஆம் ஆண்டு விக்ரம் தனது முழு நடிப்பையும் வெளிப்படுத்தி இருந்ததால் விக்ரமின் திரை வாழ்க்கைக்கு இத்திரைப்படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

பருத்திவீரன் : இத்திரைப்படத்தில் கார்த்திக் மற்றும் இவருக்கு ஜோடியாக பிரியாமணி நடித்திருந்தார். இத்திரைப்படம் முழுக்க முழுக்க கிராமத்து காதலை மையமாக வைத்து இயக்கப்பட்ட இருந்தது.  இத்திரைப் படத்தில் இடம்பெற்றிருந்த ஒவ்வொரு காட்சியும் மற்றும் வசனம் என்று அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

காதலர் தினம் : மறைந்த நடிகர் குணால் மற்றும் நடிகை சோனாலி பிந்த்ரே ஆகியோர் நடிப்பில் வெளிவந்தது.  இத்திரைப்படத்தில் கவுண்டமணி நாசர் என பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். அந்தவகையில் இத்திரைப்படம் 1989ஆம் ஆண்டு வெளிவந்தது.

மின்னலே: இத்திரைப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடிகை ரீமாசென் நடித்திருந்தார். இத்திரைப்படம் 2001ஆம் ஆண்டு வெளிவந்தது சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இத்திரைப்படத்தை இயக்குனர் கௌதம் மேனன் இயக்கி இருந்தார்.

விண்ணைத்தாண்டி வருவாயா : இத்திரைப்படம் சிம்பு மற்றும் திரிஷா கூட்டணியில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இத்திரைப்படத்தை கௌதம் மேனன் இயக்கி இருந்தார்.

சொல்லாமலே : இத்திரைப்படத்தில் நட்சத்திரப் பட்டாளங்கள் பலர் நடித்திருந்தார்கள்.அந்த வகையில் இத்திரைப்படம் காதலும், காமெடியும் கலந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அந்தவகையில் லிவிங்ஸ்டன் மற்றும் கௌசல்யா நடிப்பில் வெளிவந்தது.

காதல்: இத்திரைப்படத்தில் நடிகர் பரத் மற்றும் சந்தியா நடித்திருப்பார். இத்திரைப்படம் ஒரு ஏழை பையனை ஒரு பணக்கார பெண் காதலித்தால் கடைசியில் என்னவாகும் என்பதை மிகவும் தெளிவாக கூறியிருந்தார்கள்.

மதராசபட்டினம் : இத்திரைப்படம் நடிகர் ஆர்யா மற்றும் எமி ஜாக்சன் நடிப்பில் இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியானது.

7G ரெயின்போ காலனி : இத்திரைப்படத்தில் நடிகர் ரவி மற்றும் இவருக்கு ஜோடியாக சோனியா அகர்வால் நடித்திருந்தார். இத்திரைப்படம் உண்மையாக காதலித்தால் என்னென்ன பிரச்சனைகள் வரும் அதை அனைத்தும் காண்பித்து மிகவும் தத்துரூபமாக அமைந்தது.

அழகி : பொதுவாக பார்த்திபன் இயக்கும் அனைத்து திரைப்படங்களும் நெஞ்சை உருக்கும் அளவிற்கு அமையும் அதோடு இளையராஜாவின் இசை கலந்தால் அத்திரைப்படம் எப்படி இருக்கும் என்று சொல்லி தெரிய தேவையில்லை. அந்தவகையில் பள்ளிப்பருவ காதலை மையமாக வைத்து இயக்கப்பட்டது.

காதல் கொண்டேன்: இத்திரைப்படம் தனுஷின் எதார்த்த காமெடியால் சூப்பர் டூப்பர் ஹிட்டானது இவருக்கு ஜோடியாக சோனியா அகர்வால் நடித்து இருப்பார்.  அந்த வகையில் இத்திரைப்படம் செல்வராகவன் இயக்கத்தில் உருவானது.