ஓ சொல்றியா மாமா… ஓஓ சொல்றியா மாமா… பாடலுக்கு தனது பாணியில் அதகள படுத்திய குக் வித் கோமாளி சுனிதா.!

அல்லு அர்ஜுன் ராஷ்மிகா மந்தனா, பகத் பஸ்ஸில் ஆகியோர் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் புஷ்பா. இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று மாபெரும் வெற்றி அடைந்தது. மேலும் தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் என பல மொழிகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சமந்தாவின் ஐட்டம் பாடல் மற்றும் சாமிபாடல் ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டது. அதிலும் ஓ சொல்றியா மாமா ஓஓ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு சமந்தா ஆடிய நடனம் தான் இன்று ஒட்டுமொத்த இளசுகளின் மனதிலும் இடம் பிடித்திருக்கும். அது மட்டுமில்லாமல் பல பிரபலங்கள் இந்த பாடலுக்கு நடனமாடிய அந்த வீடியோவை சமூக வலைத் தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.

அத்தகைய வீடியோவும் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது அப்படிதான் சுனிதா கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமடைந்தார் சுனிதா அந்த நிகழ்ச்சியில் தமிழில் தப்பு தப்பாக பாடியபாடல் காட்சியை ரசித்தார்கள் ரசிகர்  அதேபோல் ஓ சொல்றியா மாமா, ஓ ஓ சொல்றியா என்ற பாடலை தனது பாணியில் ஷகிலாவின் மகள் மீலாவுடன் இணைந்து பாடியுள்ளார்.

இவர்கள் பாடிய வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சுனிதா குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் இவருக்கு பெரும் புகழையும் பெற்றுக் கொடுத்து விட்டது.

இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் வீடியோ மற்றும் புகைப் படத்தை வெளியிடுவது வழக்கம் அப்படித்தான் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இதோ அவர் வெளியிட்ட வீடியோ

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

Leave a Comment

Exit mobile version