சுந்தர் சி தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் பயணித்து கொண்டு வலம் வருகிறார். தமிழ் சினிமாவில் முதலில் உன்னை தேடி என்ற திரைப்படத்தை இயக்கிய அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் இவர் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் என்பது குறிப்பிடதக்கது.
குறிப்பாக சமீபகாலமாக இயக்குனர் சுந்தர் சி பேய் படங்களை எடுத்து வெற்றி கண்டு வருகிறார் அந்த வகையில் அரண்மனை படத்தின் அடுத்தடுத்த பாகங்களை இயக்கி வருகிறார் கடைசியாக கூட அரண்மனை மூன்றாவது பாகம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பொழுது அடுத்த கட்டமாக ஒரு புதிய படத்தை எடுக்க இருக்கிறார். சுந்தர். சி படத்தில் நடிக்க நடிகர், நடிகைகள் ஏங்குவது வழக்கம் காரணம் செம்ம ஜாலியாகவும் அதே சமயம் பல நடிகர், நடிகைகள் நடிப்பது வழக்கம் படமும் ஆக்ஷன் சென்டிமென்ட் என அனைத்தும் சுந்தர் சி படத்தில் இருப்பதால் அவரது படத்தில் நடித்தால் தனது மார்க்கெட் உயரும் என நம்பி பலரும் நடிக்கின்றனர் அது நடந்து வருகிறது.
நீண்ட இடைவேளைக்கு பிறகு யுவன் சங்கர் ராஜாவுடன் சசி இயக்கும் புதிய படத்தில் கைகோர்க்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் பல நட்சத்திர நடிகர், நடிகைகள் நடிக்க உள்ளனர் ஆனால் பெயர் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்றாலும் நடிகர் நடிகைகள் யார் யார் என்பது குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது முதன்மை கதாபாத்திரத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் போன்றவர்கள் நடிக்கின்றனர்.
இந்த படத்தில் அமிர்தா ஐயர், மாளவிகா ஷர்மா, ஐஸ்வர்யா தத்தா, ரைசா வில்சன், சம்யுக்தா சண்முகம், யோகி பாபு, கிங்ஸ்லி மற்றும் பல டாப் நடிகர் நடிகைகள் நடித்து அசத்தி வருகின்றனர் இவர்களோடு ஒருவராக விஜய் டிவியின் செல்ல பிள்ளையாக இருக்கும் தொகுப்பாளர் டிடி என்ற திவ்யதர்ஷினி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.