தலைநகரம் 2 பாகத்தில் சுந்தர் .சி ஹீரோ.! காமெடியில் வடிவேலு உண்டா.? இல்லையா.? பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இதோ.

0

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின் ஹீரோவாக என்ட்ரி கொடுத்து தற்போது வெற்றி கண்ட ஒருவர் சுந்தர் சி. இவர் ஆரம்பத்தில் உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், அன்பேசிவம், வின்னர், கலகலப்பு போன்ற சண்டை  மற்றும் காமெடி கலந்த படங்களை எடுத்து மக்களை மகிழ்வித்து வந்த நிலையில் தற்போது பேய் படம் பக்கம் திரும்பியுள்ளார்.

அந்த வகையில் சமீபகாலமாக இவர் அரண்மனை இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்களை எடுத்து வருகிறார் தற்போது இவரது இயக்கத்தில் அரண்மனை 3 உருவாகியுள்ளது. மேலும் வெகு விரைவிலேயே வெளிவர காத்திருக்கின்றன. இருப்பினும் அவ்வபொழுது ஹீரோவாக களம் இறங்கி வெற்றி கண்டுள்ளார் அந்தவகையில் கடந்த 2006ம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் தலைநகரம்.

இதுவே அவருக்கு முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் எதிர்பார்க்காத அளவிற்கு மிகப் பெரிய வசூலை பெற்றுத் தந்ததோடு சுந்தர் சி- யின் நடிப்பு வேற லெவல் இருந்தது இப்படி இருக்கின்ற நிலையில் தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக உள்ளது.  இந்த படத்திலும் ஹீரோவாக சுந்தர்சி தான் நடிக்கவுள்ளார் இந்த படத்தை வி இசட் துரை என்பவர் இயக்கவுள்ளார்.

இவர் ஏற்கனவே முகவரி, தொட்டி ஜெயா, நேபாளி, 6 மெழுகுவர்த்தி, இருட்டு போன்ற படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பூஜை போடப்பட்டு உள்ளது அப்பொழுது இயக்குனர் துரை மற்றும் சுந்தர் சி ஆகியோர் இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது மேலும் படக்குழுவினர் உடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

ஆனால் தலைநகரம் முதல் பாகத்தில் வடிவேலு காமெடியில் பின்னி பெடல் எடுத்து இருப்பார் இரண்டாம் பாகத்தில் அவர் நடிக்கிறாரா இல்லையா என்பதே தற்போது ரசிகர்களின் கேள்வியாக இருந்துவருகிறது.

thakainakaram 2
thakainakaram 2
thalainakaram 2-
thalainakaram 2-