தற்பொழுது தமிழ் சின்னத்திரையில் உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான சீரியல்களை ஒளிபரப்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.மேலும் தொடர்ந்து கடந்த 25 வருடங்களாக வித்தியாசமான சீரியல்களை ஒளிபரப்பி சீரியலுக்கு என்றே பெயர் போன தொலைக்காட்சியாக விளங்குவது தான் சன் டிவி.
பெரும்பாலும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பது வழக்கமாக இருக்கிறது.அந்த வகையில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியல் ட்ரெண்டிங்காக ஓடிக்கொண்டிருக்கிறது. சன் டிவியில் 8 மணி முதல் 8:30 மணி வரை ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியல் அண்ணன் தங்கையின் பாச உறவினை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது.
தற்பொழுது இந்த சீரியல் 500 எபிசோடுகளை தாண்டி மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது மேலும் பல மாற்றங்களும் நடந்துள்ளது. அந்த வகையில் பல கேரக்டர்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில் அண்ணனாக சின்ராசு கேரக்டரில் தற்பொழுது ஸ்ரீகுமார் நடித்து வருகிறார். இவருடைய தங்கையாக துளசி கேரக்டரில் மன்யா ஆனந்த் நடித்து வருகிறார்.

பிரச்சனைக்கு பஞ்சம் இல்லாமல் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் தற்பொழுது சின்ராசு மற்றும் பொன்னி இருவருக்கும் திருமணம் நடந்துள்ள நிலையில் பல புதிய பிரச்சனைகள் அரங்கேறி உள்ளது. அதாவது ஒரு பக்கம் சந்தியாவின் கழுத்தில் தாலி இருப்பது தெரிந்து விட்டது. இன்னொரு பக்கம் பொன்னியை சரவணன் தேடிக் கொண்டிருக்கிறார்,

இவ்வாறு வானத்தைப்போல சீரியல் மிகவும் விறுவிறுப்பாக பல தடைகளை தாடி ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் 500-வது எபிசோடை தாண்டிவுள்ளது. எனவே இந்த நிகழ்வை கொண்டாடும் வகையில் சீரியல் குழுவினர்கள் ஒன்றிணைந்து கேக் வெட்டி மகிழ்ந்துள்ளார்கள் அது குறித்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்கள்.
