ஒருகாலத்தில் திரையரங்கிற்கு படம் பார்க்க செல்வதென்றால் மக்களுக்கு மிகவும் பிடிக்கும். அதற்கு காரணம் புதிய திரைப்படம் பண்டிகை நாட்களில் திரையரங்குகளில் ஒளிபரப்புவார்கள் அதனால் அதனை பார்க்க ரசிகர்கள் முதல் மக்கள் என அனைவரும் ஆர்வம் காட்டி வந்தார்கள்.
ஆனால் சமீபகாலமாக தொலைக்காட்சிகலிலேயே புதிய திரைப்படத்தை பண்டிகை நாட்களில் ஒளிபரப்புகிறார்கள். புதிய திரைப்படத்தை தொலைக்காட்சியில் பார்ப்பதற்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள் அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த திரைப்படங்களில் முதல் ஐந்து இடத்தை பிடித்தது எந்த திரைப்படம் என்பதை இங்கே காணலாம்.
விசுவாசம்- சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, விவேக் என பல நடிகர்கள் நடித்த திரைப்படம் தான் விசுவாசம் இந்த திரைப்படம் 2019 ஆம் ஆண்டு அமேசான் ப்ரைம் ott இணையதளத்தில் வெளியானது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படம் குடும்ப பாங்கான திரைப்படம் என்பதால் மக்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு விற்கப்பட்டது.
அதன்பிறகு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட இந்த திரைப்படம் டி ஆர் பி இல் முதலிடத்தை பிடித்துள்ளது.
பிச்சைக்காரன் – விஜய் ஆண்டனி சாட்னா நடிப்பில் ஹரி இயக்கத்தில் வெளியாகி திரைப்படம் தான் பிச்சைக்காரன் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க அம்மா செண்டிமெண்டை மையமாக வைத்து உருவானது இந்த திரைப்படத்தை விஜய் ஆண்டனியின் பிலிம் கார்ப்பரேஷன் தயாரித்திருந்தது. அதேபோல் இந்த திரைப்படத்தை சன் தொலைக்காட்சியில் பலமுறை ஒலிபரப்பை டி ஆர் பி இல் அதிக ரேட்டிங் பிடித்தார்கள் இந்த திரைப்படம் சன் தொலைக்காட்சியில் இரண்டாவது இடத்தை பிடித்தது.
அண்ணாத்த – ரஜினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஆகியோர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் அண்ணாத்த இந்த திரைப்படம் கடந்த தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியானது இந்த திரைப்படத்தை சன் பிக்சர் நிறுவனம் தான் தயாரித்திருந்தது இந்த நிலையில் இந்த திரைப்படத்தை பொங்கல் தினத்தை முன்னிட்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பி டிஆர்பி மூன்றாம் இடத்தை பிடித்தார்.
சர்கார்- விஜய் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி திரைப்படம்தான் சர்கார் இந்த திரைப்படத்தில் விஜய் உடன் இணைந்த கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது இந்த நிலையில் சர்க்கார் திரைப்படத்தை சன் டிவியில் ஒளிபரப்பி டிஆர்பி நான்காவது இடத்தை பிடித்தார்கள்.
சீமராஜா – சிவகார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் வெளியாகிய திரைபடம் சீமராஜா இந்த திரைப்படத்தில் சமந்தா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் அதேபோல் இந்த திரைப்படத்தை ஆர்டி ராஜா தயாரித்திருந்தார் இந்த நிலையில் இந்த திரைப்படத்தை பலமுறை சன் தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பி டிஆர்பி யில் ஐந்தாவது இடத்தை பிடித்தார்.