மீண்டும் டிஆர்பி-யில் நாங்க தான் கிங் என நிரூபித்த முன்னணி தொலைக்காட்சி நிறுவனம்.! எந்த சீரியல் முதலிடம் தெரியுமா

தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டிபோட்டுக்கொண்டு நல்ல தரமான கதை உள்ள பல சீரியல்களை இயக்கி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது மிகவும் பிரபலமான தொலைக்காட்சிகள் விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் உள்ளிட்ட இந்த நான்கு  தொலைக்காட்சிகளும் தான் ரசிகர்களுக்கு பிடித்த வகைகள் பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.

அந்த வகையில் வாரம் வாரம் எந்த தொலைக்காட்சியில் டிஆர்பி-யில் முன்னணி வகிக்கிறது என்பதை அனைவரும் பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறோம்.  எனவே அனைத்து தொலைக்காட்சிகளும் புதிய முயற்சியில் ஆர்வம் உள்ள நடிகைகளையும் மற்றும் பல நடிகர்களையும் அறிமுகப்படுத்தி வித்தியாசமான கதை உள்ள சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.

அந்த வகையில் ஒரு சில சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதிகண்ணம்மா சீரியல் முதல் 5 இடத்தை எப்படியாவது பிடித்து விடும். அதுமட்டுமல்லாமல் பெரும்பாலும் விஜய் டிவியில் உள்ள சீரியல்கள் தான் டிஆர்பி-யில் முன்னணி வகித்து வந்தது.

இப்படிப்பட்ட நிலையில் சன் டிவி இழுத்துப் போர்த்திக்கொண்டு நடிக்கும் நடிகைகளை வைத்து இயக்கி வந்ததால் டிஆர்பி பெரிதும் அடி வாங்கியது. இப்படிப்பட்ட நிலையில் சன் டிவியும் மற்ற தொலைக்காட்சிகளை  போல கவர்ச்சியில் ஆர்வமுள்ள புதிய முகம் நடிகைகள் மற்றும் ரசிகர்கள் விரும்பும் வகையில் காதல் கதையை மையமாக வைத்து பல சீரியல்கள் புதிதாக அறிமுகமாகி உள்ளது.

அந்த வகையில் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகவும் அதிகமாக பார்க்க படும் சீரியல் ரோஜா.  இந்த நிலையில் பார்க் இந்திய நிறுவனம் வாரம் வாரம் எந்த தொலைக்காட்சியில் இடம்பெறும் நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் டிஆர்பியை அடித்து நொறுக்கி உள்ளத என்ற தகவலை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள லிஸ்டில் ரோஜா சீரியல் முன்னணி வகித்துள்ளது. இதனை அறிந்த ரோஜா சீரியல் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்து வருகிறார்கள்.

Leave a Comment