டிஆர்பி-யில் தொடர்ந்து முதலிடத்தை பிடித்த முக்கிய சீரியல்.! இந்த வார டிஆர்பி ரேட்டிங்.

சின்னத்திரையில்  உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் தொலைக்காட்சி தான் சன் டிவி.சன் டிவி சீரியல் சீரியலுக்கென்றே  பெயர் போன ஒரு தொலைக்காட்சி என்பது நாம் அறிந்த ஒன்று தான் தொடர்ந்து திரைப்படங்களை போலவே சீரியல்களில் டுவிஸ்டுகள் அமையும் வகையில் ஒளிபரப்பி வருகிறார்கள்.

இவ்வாறு தரமான சீரியல்களை சன் டிவி ஒளிபரப்பு வருவதால் குடும்ப இல்லத்தரசிகள், இளைஞர்கள் என ஏராளமான ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. சன் டிவியில் சுமார் 15 சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. அனைத்து சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருவதால் டிஆர்பி ரேட்டிங்கில்  சன்டிவி முதலிடத்தை வகித்து வருகிறது.

அந்தவகையில் இந்த வாரம் கயல் சீரியல் டிஆர்பி-யில் முதல் இடத்தை பிடித்துள்ளது இந்த சீரியலில் கதாநாயகன் சஞ்சீவ் மற்றும் கதாநாயகி சைத்ரா ரெட்டி இவர்களின் ஜோடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது இவர்களின் தத்ரூபமான நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

இந்த சீரியல் மிகவும் சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் போய்க் கொண்டிருப்பதால் தொடர்ந்து டிஆர்பியில் முன்னணி வகித்து வருகிறது. இதனை தொடர்ந்து அண்ணன் தங்கை பாச உறவை தத்துரூபமாக வெளிக்காட்டி வரும் வானத்தைப்போல சீரியல் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

இரண்டு திருமணம் செய்து கொண்டு எந்தப் பிரச்சனையும் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் சுந்தரி சீரியல் 3 ஆவது இடத்தினையும், ரொமான்டிக் சீரியலான ரோஜா சீரியல் 4வது இடத்தையும் பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து  கண்ணான கண்ணு சீரியல் ஐந்தாவது இடத்தினையும், எதிர் நீச்சல் சீரியல் 6 ஆவது இடத்தினையும், அபியும் நானும் சீரியல் 7-வது இடத்தையும் பெற்றுள்ளது.

பிறகு அருவி 8வது இடத்தினையும், சந்திரலேகா சீரியல் 9வது இடத்தினையும், ஆண்டவர் இல்லம் 10-வது இடத்தினையும் பெற்றுள்ளது இதேபோல் தொடர்ந்து அடுத்தடுத்து சன் டிவி டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறது.

Leave a Comment