sun tv serial : அதாவது சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என பல தொலைக்காட்சிகளுக்கு இடையே டிஆர்பி யில் பலத்தை போட்டி நிலவி வருகிறது அந்த வகையில் இந்த வருடத்தின் 53 வது வாரத்திற்கான டாப் 10 லிஸ்ட் சீரியல்களின் தரவரிசை பட்டியல் தற்பொழுது வெளியாகி உள்ளது.
அதேபோல் கடந்த வாரத்தை ஒப்பிடும்போது இந்த வாரத்தில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு டிஆர்பி யில் பின்னடைவை சந்தித்துள்ளது. அதிலும் கடந்த வாரத்தை விட இந்த வாரத்தில் எதிர்நீச்சல் சுந்தரி ஆனந்த ராகம் ஆகிய சீரியல்கள் டி ஆர் பி இல் பலத்த அடி வாங்கியுள்ளது.அதேபோல் பல சீரியல்கள் எதிர்பார்க்காத வகையில் முன்னிடத்தில் வந்துள்ளது இந்த லிஸ்ட் கிராமப்புறங்களிலும் நகரப்புறங்களில் அதிகமாக தொலைக்காட்சியில் பார்க்கப்பட்ட சீரியல்களின் டிஆர்பி அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.
சிங்க பெண்ணே சன் தொலைக்காட்சியில் கடந்த சில வாரங்களாகவே சிங்க பெண்ணே சீரியல் முதல் இடத்தில் இருந்து வந்த நிலையில் இந்த முறையும் 11.88 புள்ளிகளை பெற்று முதலிடத்தை தக்க வைத்துள்ளது அதேபோல் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வரும் கயல் சீரியல் இரண்டாவது இடத்தில் 11.07 புள்ளிகளை பெற்று தக்க வைத்துள்ளது.
அதேபோல் மூன்றாவது இடத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் 9.62 புள்ளிகளை பெற்று முன்னேறியுள்ளது கடந்த வாரம் ஐந்தாவது இடத்தில் சுந்தரி சீரியல் ஆனால் இந்த வாரம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
அதேபோல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் வானத்தைப்போல சீரியல் 9.49 புள்ளிகள் பெற்று நான்காவது இடத்திலும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் எதிர்நீச்சல் சீரியல் 9.07 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்திலும் இருக்கிறது.
எதிர்நீச்சல் சீரியல் டிஆர்பி யில் பலத்த அடி வாங்கியுள்ளது ஏனென்றால் படிப்படியாக கீழே இறங்கி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சிறகடிக்க ஆசை சீரியல் 8.51 புள்ளிகளை பெற்று ஆறாவது இடத்தை பெற்றுள்ளது அதேபோல் இனியா சீரியல் ஏழாவது இடத்தில் 8.22 புள்ளிகளை பெற்றுள்ளது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாக்கியலட்சுமி சீரியல் 7.48 புள்ளிகளை பெற்று எட்டாவது இடத்தை பிடித்துள்ளது. அது மட்டும் இல்லாமல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ஆனந்த ராகம் சீரியல் 9 வது இடத்தை பிடித்துள்ளது இந்த சீரியல் 7.15 புள்ளிகளை பெற்றுள்ளது கடந்த வாரம் பத்தாவது இடத்தில் இருந்த இந்த சீரியல் முன்னேறியுள்ளது.
மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் ஆகா கல்யாணம் சீரியல் கடந்த வாரம் ஒன்பதாவது இடத்தில் இருந்தது ஆனால் இந்த வாரம் 6.5 புள்ளிகளை பெற்று 10-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.