ஒரே சீரியலில் பல முன்னணி நடிகைகள் யாராவது எதிர்பார்த்தீர்களா.! யார் யார் தெரியுமா?

சன் டிவி என்றாலே சீரியலுக்கென்று  பெயர் போன ஒரு தொலைக்காட்சி. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து இருந்தது. ஆனால் பொதுவாக சன் டிவி மற்ற தொலைக்காட்சிகளை விட இழுத்துப் போர்த்திக் கொண்டு குடும்ப குத்து விளக்குகளை வைத்தும் அல்லது வெள்ளித்திரையில் மார்க்கெட் குறைந்த நடிகையர், நடிகைகளை வைத்தும் சீரியல்களை ஒளிபரப்பி வந்தார்கள்.

எனவே போகப்போக ரசிகர்கள் மத்தியில் சன் டிவி சீரியல்கள் அனைத்தும் போரடிக்க தொடங்கியதால் சன்டிவி பார்ப்பதையே நிறுத்தி விட்டார்கள். அதன் பிறகு விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற முன்னணி தொலைகாட்சிகள் கவர்ச்சியில் ஆர்வமுள்ள புதிய நடிகைகளை வைத்து பல சீரியல்களை ஒளிபரப்பி வந்ததால் இந்த தொலைக்காட்சிகளின் டிஆர்பி  எங்கேயோ போய்விட்டது.

எனவே இதனை அறிந்த சன் டிவி தற்பொழுது தான் கவர்ச்சியில் ஆர்வமுள்ள மற்றும் ரசிகர்களுக்கு பிடித்தார் போல் பல சீரியல்களை ஒளிபரப்பி பிரபலமடைந்து வருகிறார்கள். அந்த வகையில் எக்கச்சக்கமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

இது ஒருபுறமிருக்க அனைத்து தொலைக்காட்சிகளும் இரண்டு சீரியல்களை இணைத்து மகா சங்கமம் என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் புதிதாக அறிமுகமான சீரியல் தான் வானத்தைப்போல. இந்த சீரியலில் அடுத்த சில வாரங்களுக்கு திருமண காட்சி இடம்பெற உள்ளது.

எனவே இந்த எபிசோடுக்காக சித்தி 2,  அபியும் நானும், பாண்டவர் இல்லம் இந்த நான்கு சீரியல்களும் ஒன்றாக இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாக உள்ளது. அதற்கான படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.அவ்வபோது எடுத்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

sun tv serial
sun tv serial
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment