பூவே உனக்காக சீரியலில் இருந்து அனைவரின் பேவரட் நடிகர் விலக போகிறாரா.! அதிகாரப்பூர்வமான தகவல் அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

0

தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் தற்பொழுது இருக்கும் ரசிகர்கள் விரும்பும் வகையில் பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் இளம் நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்துவது அதிகபடியான காதல் காட்சிகள் இடம்பெறுவது என அனைத்துமே மிகவும் நன்றாக அமைந்து வருகிறது.

அந்த வகையில் சன் டிவி சீரியலுக்கு என்றே பெயர் போன ஒரு தொலைக்காட்சி முதலில் சன் டிவி வெள்ளித்திரையில் இருந்து வயதான நடிகர்,நடிகைகளையும் இழுத்துப் போர்த்திக்கொண்டு நடிக்கும் நடிகைகளையும் வைத்து பல சீரியல்களை ஒளிபரப்பி வந்தார்கள்.

ஆனால் மற்ற தொலைக்காட்சிகள் ஆரம்பத்தில் இருந்தே கவர்ச்சியில் ஆர்வம் உள்ள புதிய நடிகர்,நடிகைகளை அறிமுகப்படுத்தி எடுத்து வந்தார்கள். இதனால் சன் டிவியின் டிஆர்பி பெரிதும் அடி வாங்கியது. அதன் பிறகு இதனை அறிந்துகொண்ட சன் டிவி தற்பொழுது தான் இளசுகளை கவரும் வகையில் பல  சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.

அந்தவகையில் புதுமுக நடிகர் நடிகைகளுக்கும் பஞ்சமில்லை. புதிதாக அறிமுகமாகி ஹிட் பெற்று வரும் சீரியல்தான் பூவே உனக்காக இந்த சீரியலின் மூலம் புதுமுக நடிகர் நடிகைகள் பலர் அறிமுகமாகி உள்ளார்கள். அந்த வகையில் எந்த சீரியலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் இந்த சீரியலில் இருந்து விளகுவதாக நடிகர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராமில் கூறி ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அது வேறு யாரும் இல்லை பூவே உனக்காக சீரியலில் ஹீரோவாக கதிர் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த அருண் தான் விலகப் போகிறார்.

அந்தவகையில் அருண் ரசிகர்களே நான் உங்களுக்கு ஒன்று சொல்லப் போகிறேன் இதற்கு மேல் பூவே உனக்காக சீரியலில் உங்களால் கதிராக என்னை பார்க்க முடியாது இந்த சீரியலில் இருந்து நான் விலகுகிறேன் நான் இந்த நிலைமைக்கு வந்துள்ளது உங்களின் உதவியினால் தான் விரைவில் மீண்டும் உங்களுக்கு சந்தோஷமான தகவல் ஒன்று கூறுவேன் என கூறி உள்ளார்.ஒரு புறம் இது மகிழ்ச்சி தருவதாக அமைந்தாலும் ஒரு தரப்பு ரசிகர்கள் மிகவும் கவலைப்பட்டு வருகிறார்கள்.

arun
arun