சன் டிவியின் முக்கிய சீரியலில் நடித்து வந்த வில்லி நடிகை மாற்றம்.! கவலையில் ரசிகர்கள்

சன் டிவி கடந்த 25 வருடங்களாக ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பி வருகிறது. அதுவும் முக்கியமாக மற்ற தொலைக்காட்சிகளை விடவும் சன் டிவிதான் சீரியலுக்கு என்றே பெயர் போன ஒரு தொலைக்காட்சி ஆகும். சன் டிவி சீரியலயும் தாண்டி சில ரியாலிட்டி ஷோக்களும் ஒளிபரப்பி வருகிறார்கள். ஆனால் சீரியல்களை விடவும் ரியாலிட்டி ஷோக்கள் குறைந்த அளவிற்கு தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது தான் சன் டிவியில் சமையல் நிகழ்ச்சி ஒன்றை அறிமுகப்படுத்தி அந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதியை தொகுத்து வழங்க செய்துள்ளார்கள். முன்பெல்லாம் சன் டிவி இழுத்து பொத்தி கொண்டு நடிக்கும் வெள்ளித்திரையில் இருந்து பிரபலமடையாத நடிகைகள் மற்றும் நடிகர்களை வைத்து தான் இயக்கிய வந்தார்கள்.

ஆனால் டிஆர்பி பெரிதும் அடி வாங்கியதால் தற்போது பல புதுமுக நடிகர் நடிகைகளை அறிமுகப்படுத்தி இளசுகளுக்கு பிடித்த வகையில் பல காட்சிகள் இடம் பெறும் வகையிலும் புதுமுக சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது அறிமுகமாகியுள்ள அனைத்து சீரியல்களும் மற்ற அனைத்து தொலைக்காட்சிகளையும் ஓவர்டேக் செய்து டிஆர்பி-யில் முன்னணி நாடகமாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் சன் டிவி நிறுவனத்திற்கு உள்ளேயே செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக முக்கிய நடிகைகள் பலரும் சீரியலில் இருந்து விலகி உள்ளார்கள் இதற்காக ஒரு சில புதுமுக நடிகைகளும் அறிமுகமாகி உள்ளார்கள்.

thirumakal
thirumakal

அந்த வகையில் திருமகள் சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஷமிஷா திடீரென்று இந்த சீரியலில் இருந்து விலகி உள்ளார். எனவே தெய்வமகள் சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரேகா தற்பொழுது இந்த சீரியலில் இணைந்து உள்ளார்.

Leave a Comment