திடீரென திருமணம் செய்துகொண்ட சன் டிவி சீரியல் பிரபலம்..! வைரலாகும் வீடியோ

பொதுவாக நடிகைகள் என்றால் தங்களது திருமணத்தை பற்றி ரசிகர்களிடம் கூறுவது மற்றும் சோசியல் மீடியாக்களில் பல புகைப்படங்களை வெளியிடுவது என்று இணையதளத்தில் மிகவும் பிசியாக இருந்து வருவார்கள் ஆனால் சன் டிவியில் நடித்து வரும் பிரபல நடிகையும் ஒருவர் சத்தம் இல்லாமல் திருமணம் செய்துள்ளார் அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

கொரோனா தாக்கத்திற்கு முன்பு ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்த நிலையில் கொரோனா தாக்கத்தின் காரணமாக ஊரடங்கும் முடிந்தவுடன்  மீண்டும் ஒளிபரப்பாகும் பொழுது ஏராளமான நடிகர் நடிகைகள் சீரியலில் இருந்து விலகியிருந்தார்கள்.அதோடு முழுவதுமாக கதையை மாற்றி இருந்தனர் பிறகு சில புதிய நட்சத்திரங்களும் சீரியலில் நடிக்க ஆரம்பித்திருந்தார்கள்.

அந்தவகையில் கொரோனா தக்காத்தின் விளைவால் பாதியிலேயே நின்று போன ஒரு சீரியல் தான் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கண்மணி. இந்த சீரியலில் நடித்திருந்த பலருக்கும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தன அந்தவகையில் முத்துச்செல்வி என்ற கேரக்டரில் நடித்து பிரபலமடைந்தவர் தான்  சாம்பவி.

கண்மணி சீரியல் மிகவும் நன்றாக ஓடிக் கொண்டிருந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் மீண்டும் அந்த சீரியலை தொடங்கவில்லை. இதன் காரணமாக  கண்மணி சீரியலில் நடித்து வந்த சாம்பவி சன் டிவி சீரியலில் இருந்து விலகி தெலுங்கில் ஜெமினி டிவியில் ஒலிபரப்பாகி வந்த சாதனா என்ற சீரியல் ஒன்றில் ஹீரோயினாக நடித்து வந்தார்.

சொன்ன போனால் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடர் தெலுங்கு வெர்ஷன் என்பது குறிப்பிடத்தக்கது. கயல் தொடரில் நடித்து வரும் சைத்ரா ரெட்டி இதற்கு முன்பு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த  நாடகம் ஒன்றில் வில்லி கேரக்டரில் நடித்து வந்தார். இவ்வாறு தெலுங்கில் சாம்பவி நடித்திருந்த சீரியலில் தான் தற்போது தமிழில் சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் சாம்பவிக்கு பிரசன்னா என்பவருடன் பிப்ரவரி 11,2022 அன்று திருமணம் நடைபெற்று உள்ளது. திடீரென்று அந்த திருமண வீடியோ இணையதளத்தில் வைரலாக  அனைத்து ரசிகர்களும் திருமணம் சத்தமில்லாமல் நடந்து விட்டதா என்று கூறி அந்த வீடியோவை சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறார்கள்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

Leave a Comment