டிஆர்பி- யில் சன் டிவி-யை ஓரம் கட்டிய விஜய் தொலைக்காட்சி சீரியல்.! எந்த சீரியல் தெரியுமா.?

மக்களுக்கு மிகவும் பிடித்தமான சீரியல்கள் தற்பொழுது விஜய் டிவி மற்றும் சன் டிவி போன்ற தொலைக்காட்சிகளில் தான் ஒளிபரப்பாகி வருகிறது அவ்வாறு வாரந்தோறும் டிஆர்பி புள்ளிகள் வெளிவருகிறது.

அதில் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ரோஜா சீரியல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாரதிகண்ணம்மா சீரியலும் போட்டி போட்டு வருவதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் சென்ற வாரத்தின் டிஆர்பி பட்டியல் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகியுள்ளது.ஆம் அதில் பாரதிகண்ணம்மா 8546 புள்ளிகளை பெற்று ரோஜா சீரியலை முந்தி உள்ளது அது மட்டுமல்லாமல் ரோஜா சீரியல்7813 வானத்தைப்போல 7180 பாக்கியலட்சுமி 6607 என டிஆர்பி புள்ளிகள் வந்துள்ளன.

மேலும் இந்த தகவல் தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் பாரதிகண்ணம்மா ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் ரோஜா சீரியல் ரசிகர்கள் பலரும் ஏன் சென்ற வாரம் டிஆர்பி குறைந்தது என கேட்டு வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் இந்த தகவலை இணைய தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

TRP
TRP

Leave a Comment