விஜய் டிவி டி ஆர் பி- யில் முதலிடத்தில் இருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை ஓரம் கட்ட புதிய நிகழ்ச்சியை களமிறக்கும் சன் டிவி.! சபாஸ் சரியான போட்டி

மக்கள் தொலைக்காட்சியில் அதிகம் விரும்பி ஆவலுடன் பார்த்து வரும் சேனல்கள் தான் விஜய் டிவி மற்றும் சன் டிவி இந்த இரண்டு சேனல்களிலும் புதுப்புது காமெடி கலந்த நிகழ்ச்சிகளை மக்களுக்கு வெளியிடுகிறார்கள்.

அவ்வாறு விஜய் டிவியில் குக்வித் கோமாளி என்ற நிகழ்ச்சி முதல் சீசன் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது இந்த இரண்டாவது சீசனை மக்கள் மிகவும் ஆவலுடன் பார்த்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு எதிராக சன் டிவி ஒரு புதிய நிகழ்ச்சியை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதாக ஒரு தகவல் இணையதளத்தில் கசிந்து வெளியாகியுள்ளது.ஆம் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு எதிராக சன்டிவி புதிதாக சமையல் நிகழ்ச்சி ஒன்றை மக்களுக்கு வெளியிட போகிறதாம்.

மேலும் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய நம்ம ஊரு ஹீரோ என்ற நிகழ்ச்சியை மறுபடியும் மக்களுக்கு வெளியிடுவதாக தெரிவிக்கிறார்களாம்.இதனையடுத்து அதில் யூட்யூபில் சமையல் செய்து கலக்கி வரும் பிரபலங்களை மட்டும் அழைத்து பேட்டி எடுப்பது போல் நிகழ்ச்சி உருவாக உள்ளதாம்.

ஆனால் இதனைப் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளிவருமா என்பதை நாம் காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Comment