சன் டிவி பிரபல ஹிட் சீரியலில் குக் வித் கோமாளி 2 தர்ஷா குப்தாவா.? அட,இந்த சீரியலில் நீங்க அவர பார்த்திருக்கீங்களா.?

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி சீசன் 1 வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது சீசனும் ஒளிபரப்பானது.  அந்த வகையில் சீசன் ஒன்னை விடவும் இரண்டாவது சீசன் எக்கச்சக்கமான ரசிகர்களின் மனதைக் கவர்ந்தது.

இவ்வாறு நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் தற்பொழுது 3வது சீசனும் சில மாதங்களில் ஒளிபரப்பாக உள்ளதாக கூறி உள்ளார்கள். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தர்ஷா குப்தா, அஸ்வின், புகழ்,பாலா,சிவாங்கி என தொடர்ந்து பலருக்கும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

அந்த வகையில் தர்ஷா குப்தா தற்பொழுது ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து முடித்துள்ளார்.இத்திரைப்படத்தில் இவர் கிராமத்து பெண் வேடத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிந்து விட்டதாகவும் டப்பிங் வேலைகளை செய்து வருவதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் தர்ஷா குப்தா ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் முள்ளும் மலரும் சீரியலின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் இதனை தொடர்ந்து தற்போது செந்தூரப்பூவே என்ற விஜய் டிவி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த இரண்டு சீரியல்களின் மட்டும் தான் இவர் நடித்துள்ளார் என்று நினைத்து வருகிறோம் ஆனால் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் ஒன்றிலும் நடித்துள்ளார். இதுவரை யாருக்கும் தெரியாத ஒரு தகவல் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் தற்பொழுது இளசுகளின் மனதை கொள்ளையடித்து சூப்பர் டூப்பர் ஹிட் பெற்று ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் ரோஜா இந்த சீரியலில் ஸ்ருதி கதாபாத்திரத்தில் நடித்திருந்தாராம். தற்பொழுது இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகிறவர்கள்.

Leave a Comment

Exit mobile version