டிஆர்பி யில் உச்சத்தை தொட பழைய சீரியலை மீண்டும் இறக்கும் சன் டிவி – அச்சத்தில் மற்ற தொலைக்காட்சிகள்.?

சினிமா உலகில் எப்படி நடிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு சார் படம் வெற்றி யார் படம் அதிக வசூல் என்று பார்க்கிறார்கள்.  அதுபோல சின்னத்திரையில் தொலைக்காட்சிகள் TRP யில் முதலிடம் பிடிக்க போட்டி போட்டுக் கொள்கின்றனர். இதற்காக சின்னத்திரை தொலைக்காட்சிகள் புதிய நிகழ்ச்சிகளையும், சீரியல்களையும் தொடர்ந்து கொடுத்தவண்ணம் இருக்கிறது.

இதன் மூலம்  டி ஆர் பி எல் நம்பர் 1 இடத்தை பிடிக்க மோதுகின்றன சமீபகாலமாக டிஆர்பி முதலிடத்தில் இருக்கும் சன்டிவி தன்னை அசைக்க முடியாத அளவிற்கு மாற்றிக்கொள்ள சின்னத்திரையில் ஏற்கனவே ஆயிரம் எபிசோடுகளை தாண்டி  ஓடி வெற்றி நடை கண்ட சீரியலை மீண்டும்  ரீ – ரிலீஸ் செய்ய இருக்கிறதாம் இதன் மூலம் அவர்களது டிஆர்பி உச்சத்தில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

அந்த சீரியல் வேறு எதுவும் அல்ல மெட்டி ஒலி தான் இந்த சீரியல் ஆயிரம் எபிசோடுகளை தாண்டி ஓடியது மேலும் மக்களுக்கு ஒரு கட்டத்தில் பிடித்து போன சீரியலாக மெட்டிஒலி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீரியல் ஏற்கனவே 2002ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

இதில் 5 பெண்களை வளர்க்கும் ஒரு அப்பாவின் துயரமிகுந்த கதைதான் மெட்டி ஒலி இது அப்பொழுது இல்லத்தரசிகளின் ஃபேவரிட் சரியாக இருந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் சன் டிவியில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி தற்போது மக்களை இன்னும் கவர்ந்திழுத்து வருகிறது.

இதன் மூலம் சன் டிவி தொலைக்காட்சி சொல்ல வருவது என்னவென்றால் நமற்ற சேனல்கள் எத்தனை புதிய நிகழ்ச்சி மற்றும் சீரியல்களை இறங்கினாலும் அதை அடித்து நொறுக்க  எங்களிடம் மெட்டி ஒலி சீரியல் இருக்கிறது என அடித்துச் உருவம் என மறைமுகமாக கூறுகிறது.

Leave a Comment