சன் டிவி ரோஜா சீரியல் நடிகைக்கு விஜய் டிவி கொடுத்த மிகப்பெரிய வாய்ப்பு.! மிஸ் செய்த பிரியங்கா..

தற்பொழுது தமிழ் சின்னத்திரையில் நம்பர் ஒன் தொலைக்காட்சியாக வலம் வந்து கொண்டிருக்கும் சன் டிவி சீரியலுக்கு என்றே பெயர் போன ஒரு தொலைக்காட்சியாக இருந்து வரும் இந்த சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் சில வருடங்களாக மிகவும் ஹிட்டாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் ரோஜா.

இந்த சீரியல் 1300 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி வந்த நிலையில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து டிஆர்பியில் முன்னணி வகித்து வந்தது. இந்த சீரியலை பாதி பாதியாக மூன்று இயக்குனர்கள் இயக்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் சில காரணங்களினால் சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.

மேலும் இந்த சீரியலின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர்கள் தான் நடிகர் சிபு மற்றும் நடிகை பிரியங்கா இவர்களுடைய கெமிஸ்ட்ரி மிகவும் நன்றாக அமைந்ததால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இப்படிப்பட்ட நிலையில் இந்த சீரியல்களுக்குப் பிறகு தற்பொழுது நடிகர் சிபு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் 2வது பாகத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

அதேபோல் ஜீ தமிழில் சீதா ராமன் என்ற தொடரில் பிரியங்கா நடித்த ஒரு நிலையில் இவ்வாறு சமீபத்தில் அறிமுகமான சீதா ராமன் தொடர் ரசிகர்கள் மத்தியில் ஆரம்பத்திலேயே நல்ல வரவேற்பு தொடங்க ஆரம்பித்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் பிரியங்கா பேட்டி ஒன்றில் கலந்துக் கொண்டு தன்னுடைய சினிமா பயணத்தில் நடந்த பல தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்.

இவர் அந்த பேட்டியில், ஒரு ப்ராஜெக்ட் கமிட் ஆனால் அதனை முழுவதும் முடித்து தான் வெளியே வருவேன் ரோஜா தொடர் போய்க்கொண்டிருக்கும் பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது ஆனால் இந்த தொடரில் நடித்துக் கொண்டிருப்பதால் நிகழ்ச்சியின் வாய்ப்பை நிராகரித்து விட்டேன் என கூறியுள்ளார்.

Leave a Comment