பூவே உனக்காக கதிர் கதாபாத்திரத்தில் இருந்து விலகிய அருணுக்கு பதிலாக இந்த பிரபல சீரியல் நடிகரா.! அட இவரும் ரசிகர்களின் பேவரைட் ஹீரோவாசே.!

பொதுவாக வெள்ளித்திரை நடிகராக இருந்தாலும் நடிகைகளாக இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைவது கடினம் அப்படி ரசிகர்கள் மத்தியில் இவர்களுக்கு என்று ஒரு தனி இடம் இருந்தாலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைப்பதும் கடினம்.

ஆனால் சின்னத்திரை நடிகர், நடிகைகள் அப்படி கிடையாது அறிமுகமான தங்களது முதல் சீரியலிலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து விடுவார்கள். இவ்வாறு பிரபலமடைந்த இவர்களுக்கு சின்னத்திரையிலேயே தொடர்ந்து பல ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் தொடர்ந்து சீரியல்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைக்கும்.

அதன் பிறகு இவ்வாறு பிரபலமடைந்த இவர்களுக்கு வெள்ளித்திரையில் நடிப்பதற்கு தானாகவே வாய்ப்புகள் கிடைத்து விடுகிறது.  அதேபோன்று தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு நல்ல தரமான கதை உள்ள சீரியல்களை இயக்குவது மற்றும் புதுமுக நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று ஹிட்டடித்து வருகிறது.  அப்படி தொடர்ந்து ஹிட்டடித்து வரும் சீரியல் தான் பூவே உனக்காக இந்த சீரியல் அறிமுகமான சில காலக் கட்டத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

அதோடு இந்த சீரியலின் மூலம் அறிமுகமான இளம் நடிகர், நடிகைகளுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இந்த சீரியல் அமைந்துள்ளது. அந்தவகையில் அருண், ராதிகா ப்ரீத்தி, ஜோவிதா லிவிங்ஸ்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள்.

இந்த சீரியல் மிகவும் சுவாரஸ்யமாகவு,ம் விறுவிறுப்பாகவும் அமைந்ததால் இவர்கள் மூவரும் ரசிகர்கள் மத்தியில் தங்களுக்கென ஒரு இடத்தை பிடித்தார். இவ்வாறு ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில் இருந்து ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து வரும் அருண் விளகிவுள்ளார்.

இதன் காரணமாக தற்பொழுது இந்த சீரியலில் இவருக்கு பதிலாக வம்சம் சீரியலில் நடித்த ஸ்ரீனிஷ் அரவிந்த் பூவே உனக்காக சீரியலில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.  விரைவில் இதனைப் பற்றி அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.

Leave a Comment