விஜய்யின் “பீஸ்ட்” படத்தில் இணைந்த சன் டிவி செய்தி வாசிப்பாளர் – பிரபலத்துடன் இணைந்து எடுத்துக்கொண்ட க்யூட் புகைப்படம்.

தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து சிறப்பான படங்களை கொடுத்து அசத்தி வரும் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் உடன் கை கோர்த்தது தனது 65வது திரைப்படமான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது தாறுமாறாக எகிறி உள்ளது.

படத்தின் சூட்டிங் தான் போய்க்கொண்டு இருக்கிறது அதற்குள்ளேயே எதிர்பார்ப்பு இப்படி இருக்கிறது காரணம் ஒருபக்கம் தளபதிவிஜய் என்றால் மறுபக்கம் நெல்சன் டிலிப்குமர் காரணம் அண்மையில் இவர் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற மாபெரும் படத்தை கொடுத்து அசத்தி உள்ளார் அதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு வேற லெவலில் இருக்கிறதாம்.

பீஸ்ட் படத்தின் கதைக்கு ஏற்றவாறு சிறப்பான நடிகர், நடிகைகளை தேர்வு செய்துள்ளது படக்குழு அந்தவகையில் விஜயுடன் கைகோர்த்து பூஜா ஹெக்டே, செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி, அபர்ணா தாஸ்  மற்றும் சன் டிவி செய்தி வாசிப்பாளர் சுஜாதா பாபு போன்றவர்கள் பலர் நடித்து அசத்தி உள்ளனர்.

பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு தற்போது 75% முடிவடைந்ததை அடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகிறது இந்த திரைப்படம் அடுத்த வருடம் கோடை விடுமுறை நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் பீஸ்ட் படக்குழு புகைப்படங்களை வெளியிட்டு அசத்துகிறது.

அந்த வகையில் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் சன் டிவி செய்தி வாசிப்பாளர் சுஜாதா பாபு மற்றும் ரெட்டி கிங்ஸ்லி ஆகியோர் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது.

beast
beast

Leave a Comment