அம்முன்னு இருக்கும் மூஞ்சியை வைத்து 100 எபிசொட் கடந்த பிரபல டிவி சேனல்.!

அனைத்து தொலைக்காட்சிகளும் தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் உள்ள சீரியல்களை ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் சீரியலுக்கென்றே பெயர் போன ஒரு தொலைக்காட்சி தான் சன் டிவி.  சமீப காலங்களாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு பெரிதாக ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் இல்லாமல் இருந்து வந்த காரணத்தினால் தற்போது ரசிகர்கள் விரும்பும் நடிகர் நடிகைகளை வைத்து சீரியல்களை புதிதாக இயக்கி வருகிறார்கள்.

அந்த வகையில் சமீப காலங்களாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல்கள் தான் ரோஜா, சுந்தரி,மெட்டிஒலி,கண்ணான கண்ணே, வானத்தைப் போல ஆகிய சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல மவுசு இருந்து வருகிறது.

இந்நிலையில் புதிதாக சில மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட கயல் சீரியல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் அறிமுகமான சில மாதங்களிலேயே டிஆர்பி-யில் முன்னணி வகித்து முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்த சீரியலில் விஜய் டிவியில் அறிமுகமான ராஜா ராணி சீரியலின் கதாநாயகனான சஞ்சீவ் மற்றும் ஜீ தமிழ் சீரியலில் நடித்து வந்த சைத்ரா ரெட்டி ஆகியோரின் கூட்டணியில் இந்த சீரியல் உருவாகி வருகிறது. இந்த சீரியலில் இவர்களின் கெமிஸ்ட்ரி பக்காவாக இருப்பதால் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்நிலையில் தற்பொழுது சஞ்சீவ் கயலை ஒருதலையாக காதலித்து வருகிறார். சஞ்சீவ் இன்னும் கயலிடம் தனது காதலை சொல்லாமல் நண்பர்களாகவே இருவரும் பழகி வருகிறார்கள்.  இவ்வாறு சுவாரசியமான கதையை மையமாக வைத்து ஓடிக்கொண்டிருக்கும் கயல் சீரியலில் தற்போது 100வது எபிசோடை கடந்திருக்கிறது.

இதற்காக அந்த சீரியலின் குழுவினர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் அந்த புகைப்படமும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.  ரசிகர்களும் வாழ்த்துகளை கூறி வருகிறார்கள். இதற்கு மேல் அடுத்த எபிசோடுகள் எப்படி சஞ்சீவ் கயலிடம் காதலை கூறுகிறார் என்பதை மையமாக வைத்து ஒளிபரப்பாக உள்ளது.

Leave a Comment