கண்ணான கண்ணே சீரியலில் இருந்து விலகிய முக்கிக நடிகைகள் மீண்டும் இணைந்துள்ளார்களா.! யார் அந்த நடிகைகள் தெரியுமா.? நீங்களே பாருங்க

சன் தொலைக்காட்சி பல ஆண்டு காலங்களாக பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.  அந்த வகையில் பல சிக்கல்களும் ஹிட் பெற்று வந்தது ஒரு கட்டத்திற்குப் பிறகு சன் டிவி தொடர்ந்து அந்து போன கதைகளையும் இழுத்து பொத்தி கொண்டு நடிக்கும் நடிகைகளையும் வைத்து சீரியல்களை இயக்கி வந்ததால் ரசிகர்கள் சன் டிவி பார்ப்பதை நிறுத்தி விட்டார்கள்.

இதனை தக்க வைத்துக் கொண்ட விஜய் டிவி ரசிகர்கள் விரும்பும் வகையில் கவர்ச்சியில் ஆர்வமுள்ள பல புதுமுக நடிகைகளையும், சுவாரசியமான கதை உள்ள சீரியல்களையும் இயக்கி வந்ததால் சன் டிவியை ஓரம்கட்டி டிஆர்பி-யில் முன்னணி வகித்து வந்தார்கள்.

இவ்வாறு டிஆர்பி-யில் பெரிதும் அடி வாங்கிய சன் டிவி மற்ற தொலைக்காட்சிகள் போலவே தொடர்ந்து பல புதுமுக நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்தி ரசிகர்கள் விரும்பும் வகையில் சுவாரசியமான கதை உள்ள சீரியல்களை தேர்ந்தெடுத்து ஒளிபரப்பி வந்தார்கள்.

தற்போது தான் சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பல சீரியல்கள் ஹிட் பெற்று வருகிறது.  இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருவதால் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஒரு சில சீரியல்கள் கதை மாற்றத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது ஆனால் ரோஜா சீரியல் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருவதால் எந்த மாற்றமும் இல்லாமல் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த சீரியல் நிறுவனத்தின் அலுவலகத்திலேயே நடத்தப்பட்டு வருகிறது. இந்த சீரியலை தொடர்ந்து தற்போது கண்ணான கண்ணே சீரியலை பற்றிய சில தகவல் வெளிவந்துள்ளது. அந்த வகையில் இந்த சீரியல் சில காலங்களாக ஒரு சிலரை மட்டும் வைத்து இந்த சீரியலின் படப்பிடிப்பு நடைபெற்று வந்ததாகவும் தற்போது மீண்டும் வாசுகி மற்றும் யமுனா வேடத்தில் நடித்து வரும் நடிகைகள் படப்பிடிப்பிற்கு வந்துள்ளார்கள் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

VASUKI YAMUNA
VASUKI YAMUNA

Leave a Comment