சன் டிவிக்கு 2.5 லட்சம் அபதாரம் விதித்துள்ளது பிசிசிசி, சன் டிவியின் முக்கிய சீரியல் சர்ச்சை காட்சிகளால் டி ஆர் பி யில் இரண்டாம் இடத்தில் இருக்கும் விஜய் தொலைக்காட்சியை விட சன் தொலைக்காட்சி அதிக பார்வையாளர்களை கடந்தது, அதற்கு காரணம் இந்த காட்சி தான்.
சமீப காலமாக சன் டிவியில் கல்யாண வீடு சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது, கடந்த மே மாதம் ஒளிபரப்பப்பட்ட காட்சி பிசிசிசி இரண்டரை லட்சம் அபதாரம் விதித்துள்ளது, இந்த சீரியலை மெட்டி ஒலி இயக்கிய திரு முருகன் தான் இயக்கி நடித்து வருகிறார், இந்த சீரியலில் வில்லியாக இருக்கும் ரோஜா சில ரவுடிகளிடம் தனது சகோதரியை பாலியல் வன்புணர்வு செய்யச்சொல்லி ஒரு காட்சி ஒளிபரப்பப்பட்டது.
அதன் பிறகு ஜூன் 28-ஆம் தேதி ஒளிபரப்பப்பட்ட காட்சியில் அந்த பாலியல் குற்றவாளிக்கு வன்முறையான வகையில் தண்டிக்கும் அளவிற்கு ஒரு காட்சி ஒளிபரப்பப்பட்டது, இதைப்பற்றி வந்த புகார் தான் தற்பொழுது வைரலாகி வருகிறது. அதனால் பிசிசிசி சன் டிவி மீது அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது, அதுமட்டுமில்லாமல் அடுத்த வாரம் முழுவதும் இந்த சீரியல் ஒளிபரப்புவதற்கு முன்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது அதுமட்டுமில்லாமல் 250000 அபதாரம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளது.
