ஒரே ஒரு தொகுப்பாளரை வைத்து எண்ணிலடங்காத எபிசோடுகளை முடித்த சன் டிவி..! அவங்களோட குரல் மட்டும் மறக்கவே முடியாது..!

மூன்று மணி நேரம் ஓடும் திரைப்படத்தை தியேட்டரில் பார்க்கும் பொழுது அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இருக்க வேண்டும் அந்த வகையில் பார்க்கும் திரைப்படத்தின் கதையும் சுவாரசியமும் சிறப்பாக இருந்தால் மட்டுமே அந்த திரைப்படத்தை தொடர்ந்து பார்க்க முடியும்.

அதுமட்டுமில்லாமல் ஒரு நல்ல பொழுதுபோக்கு திரைப்படமாக அமைந்தால் அதில் மூன்று மணி நேரத்தை செலவிட அதிக அளவு எதிர்பார்ப்பும் ஆர்வமும் இருப்பது வழக்கம்தான் அந்தவகையில் தங்களுடைய  அனைத்து கேள்விக்கும் பதிலாக வெளிவந்தது தான் டாக்டர் மூவிஸ்.

திரை உலகில் உள்ள அனைத்து சினிமா ரசிகர்களுக்கும்  வழிகாட்டியாக அமைந்து வருவது தான் சன் டிவியில் ஒளிபரப்பாகும் டாப் டென் மூவிஸ். இவ்வாறு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் சுரேஷ்குமார் தொகுத்து வழங்கி வருகிறார்.

அந்தவகையில் ஒரு வாரத்தில் வெளியாகும் பத்து திரைப்படங்களில் கதை நடிப்பு மற்றும் அவை எந்த வரிசையில் இருப்பது குறித்து சுரேஷ்குமார் பேசுவது மிகவும் சிறப்பாக அமைவது மட்டுமில்லாமல் அவர் வெளியிடும் விஷயங்கள் மிகவும் சுவாரஸ்யமாகவும் சுருக்கமாகவும் இருக்கும்.

அதேபோல இவர் மிக சுருக்கமாக படத்தின் கதையை தெளிவாக ரசிகர்களுக்கு எடுத்து வைப்பதில் வல்லவர். இவ்வாறு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு 90ஸ் கிட்ஸ் எப்பொழுதும் ஆவலுடன் காத்திருப்பார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியை பார்த்த பிறகுதான் எந்த திரைப் படத்திற்கு போகலாம் என்று யோசிப்பார்கள்.

மேலும் இந்த நிகழ்ச்சி சுமார் 19 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் அதுமட்டுமில்லாமல் 555 எபிசோடுகள் இதுவரை முடிவடைந்துள்ளது.  இவ்வாறு இத்தனை ஆண்டுகளாக ஒளிபரப்பாகி இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது ஆனால் தற்போது இந்த நிகழ்ச்சி ஒளிபரப்ப படவில்லை.

தற்போதெல்லாம் கையில் இருக்கும் மொபைல் போன் மூலம் படத்தின் கதையை எளிதாக தெரிந்து கொள்கிறார்கள் இதன்காரணமாக தற்சமயம் இந்த நிகழ்ச்சி  நிறுத்தப்பட்டது சொல்லலாம்

top 10
top 10

Leave a Comment