சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த ஆதிரையின் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது ஆனால் இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. பல பிரச்சனைகளுக்கும் நடுவே ஜனனி அதிரையை கோவிலுக்கு அழைத்து செற்று நிலையில் அருண் வரவில்லை.
கௌதமிடம் கேட்கும் பொழுது அருண் காணாமல் போனது பெரிய வருகிறது எனவே கௌதம் தொடர்ந்து அருணை தேடி வரும் நிலையில் அருணுக்கு என்ன ஆனது என்பதை காட்டாமல் இருந்தார்கள். எனவே குணசேகரன் நடுரோட்டில் வைத்து கரிகாலன் ஆதிரையின் திருமணத்தை நடத்தி வைக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் ஆதிரை காரில் போய்க்கொண்டிருக்கும் போது கரிகாலன் கட்டியிருந்த தாலியை கழட்டி வெளியில் வீசிவிட்டு தாலி கட்டுனால் மட்டும் அவன் என் புருஷன் ஆயிட முடியுமா என கூறிய நிலையில் இதனால் குணசேகரன் ஆதிரை கரிகாலனின் திருமணத்தை ரிஜிஸ்டர் செய்ய முடிவெடுத்து ரிஜிஸ்டர் ஆபீஸ்க்கு செல்கிறார்கள்.
அங்கு ஆதிரையை கையெழுத்து போடுமாறு கூற அப்பொழுது நான் ஞானம் அண்ணனிடம் தனியாக பேச வேண்டும் என கேட்கிறார் பிறகு குணசேகரனும் சரி என சொல்லிவிட்டு பேச சொல்ல அப்பொழுது நான் அருணிடம் ஒருமுறை பேச வேண்டும் எனக் கேட்க ஞானம் அதெல்லாம் முடியாது என கூறுகிறார்.
குணசேகரன் நானே அவனுக்கு போன் பண்ணி தரேன் என போன் பண்ண வீட்டில் இருப்பவர்கள் எடுத்து இனிமேல் அவனுக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறிவிட்டு போனை வைத்து விடுகிறார்கள். எனவே வேறு வழியில்லாமல் ஆதிரையும் கையெழுத்து போடுகிறார்.
இதனை அடுத்து தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அருண் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஜனனி அங்கு சென்று பார்க்கிறார் அப்பொழுது அருணின் அம்மா என்ன இது என கேட்க நீங்க ஆரம்பிச்சதை முடிச்சு வைக்கலாம்னு நினைச்ச மேம் என சொல்ல இப்ப எங்க வந்து நிக்குது பாரு என அருணின் அப்பா கூறுகிறார் இதோடு ப்ரோமோ நிறைவடைகிறது.