சன் டிவி ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரையின் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் அது யாருடன் என்ற கேள்வி கூறி எழுந்துள்ளது. மிகவும் விறுவிறுப்பான எபிசோடுகளுடன் சுவாரசியமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது கரிகாலனை ஏமாற்றிவிட்டு ஜனனியத்தின் டீம் தப்பித்துள்ளது.
ஆதிரை எங்கு சென்று இருக்கிறார் என யாருக்கும் தெரியாமல் இருந்து வரும் நிலையில் ஜான்சி ராணி இந்தக் கல்யாணம் மட்டும் நடக்கலேனா இன்னொரு ஜான்சி ராணியை பார்ப்பீங்க என மிரட்டுகிறார். குணசேகரன் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தவரும் நிலையில் குணசேகரனையும் மதிக்காமல் ஜான்சி ராணி அவமானப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் ஆதிரை காணாமல் போன நிலையில் குணசேகரன் தூக்கு போட போக தடுத்து நிறுத்திய விசாலாட்சி அதிரை, அருண் கல்யாணம் குறித்த விஷயத்தை போட்டு உடைக்க ஜான்சி ராணி குணசேகரனை மிரட்டிய நிலையில் இதனை அடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடக்க இருக்கிறது குறித்து ப்ரோமோ வெளியாகியுள்ளது.
வெகு நேரமாக ஜனனி டீம் கோவிலில் அமர்ந்திருக்க அருண் கோவிலுக்கு வரவில்லை மேலும் போனும் ரீச் ஆகாத காரணத்தினால் அனைவரும் பெரும் பதட்டத்தில் இருந்து வருகிறார்கள். இவ்வாறு என்ன செய்வது என்று தெரியாமல் அனைவரும் முழித்து வரும் நிலையில் ஜனனி கௌதமுக்கு போன் செய்து அருண் எங்கே என கேட்க அருண் இன்னும் வரலையா என்று அவரும் கேட்கிறார்.
பிறகு தான் அருண் காணாமல் போன விஷயம் அனைவருக்கும் தெரிய வருகிறது மறுபுறம் ஞானத்துக்கு ஜனனி டீம் முப்பாத்தம்மன் கோவிலில் இருப்பதாக தகவல் கிடைத்திருக்கும் நிலையில் இதனை குணசேகரன் சொல்லி விட்டு வேக வேகமாக கிளம்ப குணசேகரன் கரிகாலனை கிளம்புடா என சொல்கின்றார். இவ்வாறு இந்த கோவிலில் ஆதிரை கரிகாலன் திருமணம் நடைபெறுமா? இல்லை அருண் ஆதிரையின் திருமணம் நடைபெறுமா? என்பது இனி வரும் எபிசோடில் தெரியவரும்.