தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எப்படியாவது அருண்-ஆதிரை திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என ஜனனி, சக்தி, நந்தினி, ரேணுவா என அனைவரும் போராடிவரும் நிலையில் மறுபுறம் அதிரைக்கும் கரிகாலனுக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் எனவும் அப்பத்தாவிடம் இருக்கும் 40% சொத்தை ஆட்டைய போட வேண்டும் என குணசேகரன் பல திட்டங்களை தீட்டி வருகிறார்.
கரிகாலன் அதிரையின் திருமணத்தை மருமகள்கள் ஒன்றிணைந்து நிறுத்தி விடுவார்களோ என்ற பயத்தில் அனைவரிடமும் சத்தியம் கேட்கிறேன் ரேணுகா வாயை திறக்காத அளவிற்கு பல கேள்விகளை கேட்டு அசிங்கப்படுத்துகிறார். இப்படிப்பட்ட நிலையில் அப்பத்தா சுயநினைவில் இல்லாமல் இருந்து வரும் நிலையில் அவரிடம் கைரேகையை வாங்கி 40% சொத்தை ஆட்டையை போடலாம் என குணசேகரன் நினைத்து வந்த நிலையில் அதற்கு ஜனனி ஆப்பு வைத்துள்ளார்.
அதாவது அட்விகேட் வீட்டிற்கு வந்தது தெரிந்த நிலையில் குணசேகரன் இப்படி ஏதாவது செய்வான் எனத் தெரிந்து கொண்ட ஜனனி கேமரா ஒன்றை அப்பத்தான் இருக்கும் ரூமில் வைக்கிறார். இதனை அடுத்து அப்பத்தா சொன்ன ஜீவானந்தத்தை தேடி மண்டபத்திற்கு ஜனனி, சக்தி இருவரும் கிளம்புகின்றனர்.
இந்நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பது குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் ஜான்சிராணியிடம் ஜனனி திருட்டு வேலை பண்ற உனக்கு நியாயத்தைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கு என்று கேட்க அதற்கு ஜான்சிராணி ஒரு நாள் இல்ல ஒரு நாள் உன் தலையில இடியை தூக்கி போட்டுட்டு தான் இவங்க எல்லாம் நிம்மதியா இருப்பாங்க என குணசேகரன் அண்ணனுக்கு சாபம் விடுகிறார்.
இதனால் கடுப்பான குணசேகரன் கை உடைந்திருக்கும் கரிகாலனை கூப்பிட்டு உடைந்த கையை மேலே உடைத்து விடுகிறார் இதனைப் பார்த்த ஜான்சி ராணி அலறி துடிக்கிறார் எனவே இதனால் இவர்களுக்கு இடையே சண்டை மேலும் முத்தி விடுகிறது.