ஜனனியை அடிக்க வந்த கதிர்.! ஓங்கி பளார் என அரைந்த சக்தி.. நடுநடுங்கி நிற்கும் குணசேகரன்…

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் பல திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் அனைவருடைய எதிர்பார்ப்பும் தற்பொழுது தோல்வியில் முடிந்திருப்பது பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஜனனி எப்படியாவது ஆதிரைக்கும் அருணுக்கும் திருமணம் நடத்தி வைக்க வேண்டும் என முயற்சி செய்து வந்த நிலையில் அதே நேரத்தில் குணசேகரன் ஆதிரை கரிகாலனின் திருமணத்தை நடத்தி வைக்க அனைத்து வேலைகளையும் செய்து வந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் வரும் வழியில் அருணுக்கு விபத்து நடைபெற்றதால் ஆதிரையின் திருமணம் அருணுடன் நடக்க முடியாமல் போனது இவர்கள் இருக்கும் கோவிலை தெரிந்துக் கொண்ட குணசேகரன் குடும்பத்தை அழைத்துக் கொண்டு வந்த நிலையில் நடு ரோட்டில் ஆதிரை கரிகாலனின் திருமணத்தை நடத்தி வைத்தார்.

திருமணம் முடிந்த பிறகு ஆதிரையை அழைத்துச் செல்ல ஆதிரை தனது தலியை கழட்டி வெளியே வீசியதால் இது சரிப்பட்டு வராது என்பதற்காக ரிஜிஸ்டர் ஆபீஸ்க்கு சென்று திருமணத்தை ரிஜிஸ்டர் செய்துவிட்டார்கள் இப்படிப்பட்ட நிலையில் ஆதிரையை கரிகாலன் வீட்டிற்கு குணசேகரன் அழைத்து சென்று இதுதான் இனிமேல் உன்னுடைய புகுந்த வீடு இங்கு தான் இருக்க வேண்டும் என சொல்ல ஆதிரை இங்கு என்னால் எப்படி வாழ முடியும் என அழுகிறார்.

இவ்வாறு ஆதிரையின் வாழ்க்கை நாசமாய் போயிருக்கும் நிலையில் ஜனனி அருணை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு செல்கிறார் அருணின் அம்மா என்ன பண்ணி வச்சிருக்க என கேட்க நீங்க ஆரம்பித்ததை நான் முடிச்சு வைக்கணும்னு நினைச்ச என சொல்ல அது எங்க வந்து நிப்பாட்டி இருக்கு பாரு என அருண்னின் அப்பா கூறுகிறார்.

இதனை அடுத்து தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் குணசேகரன் தான் ஜெயித்து விட்டதாக கூறி ஜனனியை மன்னிப்பு கேட்க சொல்கிறார் நீங்க தோத்துட்டீங்க என ஜனனி பேச அந்த நேரத்தில் கதிர் ஜனனியை அடிக்க கை ஓங்குகிறார் சக்தி உடனே பளார் என கதிரையை அடித்து விட்டு என் பொண்டாட்டி யாராவது அடிச்சா அடிப்பேன் என பேச மற்ற அனைவரும் மகிழ்ச்சி அடைகிறார்கள் இதோடு ப்ரோமோ நிறைவடைகிறது.