எதிர்நீச்சல் சீரியல் மிகவும் சுவாரசியமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்பொழுது ஆதிரையின் திருமணத்தை வைத்து மிகவும் விறுவிறுப்பாக எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் ஜனனி விசாலாட்சியிடம் என்ன பண்ணுவீங்களோ எங்களுக்கு தெரியாது நீங்க தான் இந்த மண்டபத்தில் இருந்து எங்களை வெளியில் அனுப்பி வைக்க வேண்டும் எனக் கூறிய நிலையில் விசாலாட்சியும் தனது மகனிடம் ஆதிரை பிறக்கும் பொழுது வேண்டிக்கொண்ட நேர்த்திக்கடன் ஒன்று இருப்பதாகவும் எனவே கோவிலுக்கு சென்று விட்டு வரட்டும் என கூற அதற்கு ஜான்சிராணி யாராவது கல்யாணத்துக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கோவிலுக்கு போவாங்களா என சண்டை போடுகிறார்.
பிறகு ஆதிரை, ஜனனி, நந்தினி, ரேணுகா ஆகியோர்களுடன் கரிகாலனையும் கதிரையும் கூட அனுப்பி வைக்கிறார். வழியில் கதிரை விட்டு விட்டு சென்றுவிட கோவிலுக்கு சென்றவுடன் அனைவரும் சாமி கும்பிடுவது போல் நடிக்கிறார்கள்.
அப்பொழுது கரிகாலனிடம் ரேணுகா தனக்கும் ஆதரிக்கும் திருமணம் நடக்க வேண்டும் என 108 முறை கூறுமாறு சொல்லிவிட்டு அனைவரும் எஸ்கேப்பாகி அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருக்கும் நேரத்தில் கரிகாலன் இவர்களை கண்டுபிடித்து விடுகிறார்.
எனவே அனைவரும் அதிர்ச்சியடைய பிறகு இந்த நேரத்தில் காரில் ஏறி தப்பித்து விடுகிறார்கள். இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் குணசேகரன் விசாலாட்சி மற்றும் தனது மனைவியிடம் ஆதிரை எங்க மரியாதையா சொல்லிடுங்க எனக் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில் கரிகாலன் மாமா என பதறிப் போய் வருகிறார்.
இதனை அடுத்து மறுபுறம் அத்தை ஏதாவது உளறி வச்சிட்டாங்கன்னா என்ன பண்றது என நந்தினி கேட்க அதற்கு ஜனனி அத்தைக்கு எந்த கோவில் என்று தெரியாது என கூறுகிறார். பிறகு விசாலாட்சியிடம் ஜான்சி ராணி கல்யாணம் நடந்தே தீரனும் அப்படி இல்லைனா நீ வேற ஜான்சி ராணிய பாப்பா எனக் கூற குணசேகரன் கடுப்பில் கோபமாக ஒரு பார்வை பார்க்கிறார்