அருண் தங்கி இருக்கும் ஊருக்கு குடும்பத்தினர்களை அழைத்து செல்லும் ஜான்சி ராணி.! அனைத்து கேள்விகளுக்கும் விரைவில் முடிவெடுக்கும் ஜனனி.. அதிர்ச்சியில் ஆதிரை

0

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சியாக இருந்து வரும் சன் டிவியில் தொடர்ந்து ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் அனைத்து சீரியல்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் சீரியல் தான் எதிர்நீச்சல் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை தட்டிக் கேட்க வேண்டும் அதற்கு பெண்கள் தான் போராட வேண்டும் என்பதனை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது.

அந்த வகையில் இளைய மருமகளான ஜனனி தனக்கு முன்பு வந்த மூன்று மருமகள்களையும் எதிர்த்து கேட்கும் அளவிற்கு தைரியத்தை உண்டாக்கியுள்ளார். இப்படிப்பட்ட நிலையில் எப்படியாவது அதிரைக்கு அந்த பைத்தியக்காரனுடன் திருமணம் செய்து வைக்க வேண்டும் என குணசேகரன், கதிர் இருவரும் போராடி வருகின்றார்கள்.

இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக ஜனனி மற்றும் மற்ற மூன்று மருமகள்களும் பல பிளான்களை செய்து வருகிறார்கள். இந்நிலையில் ஜனனி ஆதிரை காதலித்து வரும் அருணை யாருக்கும் தெரியாமல் ஒரு இடத்தில் தங்க வைத்துள்ள நிலையில் ஜான்சிராணி குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரையும் வெளியூருக்கு அழைத்து செல்கிறார்.

அந்த ஊரில் தான் அருணம் தங்கி இருக்கிறார். இவ்வாறு ஜனனி பல பிளான்கள் போட்டு வரும் நிலையில் அதனை கண்டுபிடிப்பதற்காக கதிர் முயற்சி செய்து வருகிறார் எனவே என்ன பிளான் போட்டாலும் எதனையும் கண்டுபிடிக்க முடியாது என்றும் அப்பத்தா கேட்கும்பொழுதெல்லாம் அவர்கள் ஏமாறும் வகையில் இருக்கும் பதில்கள்தான் தன்னிடம் இருப்பதாகவும் சொல்கிறார். மேலும் விரைவில் இதற்கெல்லாம் பதில் வரும் என கூறியதோடு முதல் ப்ரோமோ முடிவடைகிறது.

இதனை அடுத்து ஆதிரை ஜனனி நந்தினி மற்றும் கதிர் ஆகிய நான்கு பெரும் ஒரே காரில் போகும் நிலையில் வரும் அந்த ஊரில் தான் தங்கியிருக்கும் விஷயத்தை இவர்களிடம் ஜனனி கூறுகிறார். எந்த ஊர் என்று தெரிந்து கொள்வதற்காக கதிரிடம் போன் பண்ணி நந்தினி கேட்க கதிர் கோபப்படுகிறார் அதன் பிறகு வத்தலகுண்டு போகும் வழி எனக் கூறியவுடன் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இவ்வாறு இவர்கள் போகும் வழிக்கு நேராக அருணும் அவருடைய நண்பர் இருவரும் நடந்து வருகிறார்கள் எனவே என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.