அட்டூழியம் செய்யும் கதிர்.. விஷ செடிக்கு தண்ணீர் ஊற்றி வளர்த்து விட்டு இப்ப என்ன பண்ண முடியும்.! குணசேகரனுக்கு பதிலடி கொடுத்த ஜனனி..

0
ethirneechal-1
ethirneechal-1

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது செண்டிமெண்டாக போய்க்கொண்டிருக்கும் நிலையில் இன்றைய எபிசோடில் கதிர் செய்யும் அட்டூழியத்தை யாரும் தட்டிக் கேட்க முடியாமல் குடும்பத்தினர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்து வருகிறார்கள். ஓவர் ஆட்டம் போடும் கதிர் குடும்பத்தினர்கள் அனைவரையும் தொடர்ந்து சண்டை போட்டு அவமானப்படுத்தி வருகிறார்.

அப்படி ரேணுகாவை சண்டை போட்டதோடு மட்டுமல்லாமல் முடியை பிடித்து இழுத்த நிலையில் எனவே தனது மனைவி ரேணுகாவை பேசியது தப்பு என மனைவிக்காக கதிரிடம் ஞானம் நியாயம் கேட்க கடைசியில் அவமானப்பட்டது தான் மிச்சம். எனவே தன்னைவிட வயதில் சின்னவன் இப்படி தன்னை அவமானப்படுத்திவிட்டான் என்ற வருத்தத்தில் ஞானம் தனியாக படுத்து அழுது கொண்டிருக்கிறார்.

இவ்வாறு ஞானம் வருத்தப்படுவதை பார்த்த நந்தினி தாங்கிக்கொள்ள முடியாமல் தனது கணவர் செய்த தவறுக்காக ஞானத்தின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். இதனை பார்த்த கதிர் மறுபடியும் நந்தினி விடப் பிரச்சினை பண்ணி ஞானத்திடம் வம்பு வளர்த்து மேலும் சண்டை அதிகமாகிறது. இவ்வாறு நாம் கண் முன்னாடியே பெத்த பிள்ளைகள் சண்டை போட்டுக் கொள்கிறார் என்ற மனவேதனையில் குணசேகரனின் அம்மா அழுகிறார்.

இப்பதான் அப்பத்தா சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது விஷம் செடி என்று நினைத்து தண்ணீர் ஊற்றி வளர்த்து விட்டு விட இனி அதை கட் பண்றது ரொம்பவே கஷ்டம் என்று கூறுகிறார். இவ்வாறு குணசேகரன் தப்பு பண்ணும் பொழுதெல்லாம் கூடவே இருந்துகிட்ட இப்பொழுது அனைத்தும் கஷ்டம் என்றால் என்ன பண்ண முடியும்.

இதனை அடுத்து கௌதமை புரிந்துக் கொண்ட சக்தி பண்ணுன தப்புகள் அனைத்திற்கும் மனிப்பு கேட்டுவிட்டு இருவரும் நண்பர்களாக மாறிவிடுகின்றனர். தற்பொழுது அவர் பொறுப்பில் அருணை ஒப்படைத்து விட்டு சக்தி வீட்டிற்கு வருகிறார். சமீப காலங்களாக குணசேகரனின் காட்சி மிகவும் குறைவாக இருந்து வருகிறது.

அப்படி குணசேகரன் வீட்டிற்கு ஜானகிராணி குடும்பத்தினர்களுடன் கோவிலுக்கு போக வேண்டும் என சொல்ல உடனே குணசேகரன் சரி என்று சொல்கிறார். ஆனால் ஜானகிராணி மருமகளையும் கோவிலுக்கு கூட்டிட்டு போகணும் என்று கூற இதற்கிடையில் குணசேகரன் ஜனனி ஓசு சோறு சாப்பிடுவதை குத்தி காட்ட அதற்கு ஜனனி நீங்க யாரும் ஓசு சோறு சாப்பிடல என்று பதிலடி கொடுக்கிறார்.