ஒரு வழியாக ஜனனியிடம் ரகசியத்தை உடைத்த அப்பத்தா.! ஆட்டம் காண போகும் குணசேகரன்..

0
ethir-neechal
ethir-neechal

தமிழ் சின்னத்திரையில் நம்பர் ஒன் தொலைக்காட்சியாக வலம் வந்து கொண்டிருக்கும் சன் டிவி தொடர்ந்த பல வெற்றி சீரியல்களை அறிமுகப்படுத்தி வரும் நிலையில் ஏராளமான சீரியல் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்பொழுது டிஆர்பி-யில் முன்னணி சீரியலாக வலம் வந்து கொண்டிருப்பது தான் எதிர்நீச்சல்.

இந்த சீரியல் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை எதிர்த்து போராட வேண்டும் எனவும் பெண்களுக்கு சுயமரியாதை மிகவும் அவசியம் என்பதையும் மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருவதால் பெண்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு கிடைத்து வருகிறது. எனவே ஏராளமான பெண்கள் இதனை பார்த்து தங்களது வீட்டிலும் நிஜத்தில் மாறி வருவதால் பல ஆண்கள் இந்த சீரியலை நிறுத்த வேண்டும் என கூறி வருகின்றனர்.

இருந்தாலும் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருவதால் இந்த சீரியலை தொடர்ந்து இயக்கி வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் அப்பத்தா ஜனனிக்கு ரகசியம் கூறி இருக்கும் நிலையில் அது குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதாவது அதிரை-அருண் திருமணத்தை எப்படியாவது நடத்தி வைக்க வேண்டும் என ஜனனி முயற்சி செய்து வருகிறார்.

ஆனால் குணசேகரன் இதனை அடுத்து நிறுத்தி வேறு ஒருவனுடன் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற முடிவில் இருக்க அதற்கான வேலைகளும் நடைபெற்று வருகிறது. தற்பொழுது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் ஜனனி அப்பத்தாவை பார்க்க போக அப்பொழுது அப்பத்தா ஜீவானந்தத்தை போய் பார்த்தியா என்று கேட்க யார் அந்த ஜீவானந்தம் என ஜனனி அப்பத்தாவிடம் கேட்கிறார்.

அப்பத்தாவும் அந்த ரகசியத்தை ஜனனிடம் கூறுகிறார் அதன் பிறகு ரேணுகா கண்கலங்கி உட்கார்ந்து கொண்டிருக்க அங்கு வரும் ஞானம் எதுக்குடி அழுதுட்டு உக்காந்துட்டு இருக்க ஜனனி என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க அத்தை அவங்க அண்ணன் கிட்ட கேட்கிறாரா என்று பார்க்கலாம் என ஷாக் கொடுக்கிறார்.