சன் டிவி ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தொடர்ந்த பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்பொழுது ஆதிரையின் திருமணத்தை வைத்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் இன்றைய எபிசோடில் குணசேகரன் ஆதிரை இருக்கும் கோவில் தெரிந்திருக்கும் நிலையில் அனைவரும் கோவிலுக்கு கிளம்புகிறார்கள்.
அங்கு போய்க் கொண்டிருக்கும் பொழுது கரிகாலன் இன்னாரம் அவர்களுக்கு திருமணம் நடந்து முடிஞ்சிடுச்சுன்னா என்ன மாமா பண்றது எனக் கேட்க கல்யாணம் நடந்துச்சுன்னா அவுங்கள அப்படியே விடுவனா என குணசேகரன் சொல்ல அதற்கு ஜான்சி ராணி கல்யாணம் மட்டும் நடந்துச்சுன்னா இவனுங்கள நான் சும்மா விடுவனா என சத்தம் போடுகிறார் இதனால் கடுப்பான கதிர் சும்மா இருமா ஏதாச்சும் சொல்லிக்கிட்டே இருக்க என கூறுகிறார்.
இதனால் இவர்களுக்கிடையே சண்டை ஏற்படுகிறது. மறுபுறம் ஜனனி தொடர்ந்து கௌதமுக்கு போன் போடுகிறார் ஆனால் போகவில்லை ஒரு கட்டத்தில் கௌதம் போன் பண்ணி அருணை தனது நண்பர்கள் மூலம் தேட சொல்லி இருப்பதாகவும் விரைவில் சிசிடிவி கேமரா மூலம் அருணை கண்டுபிடித்து விடலாம் எனவும் கூறுகிறார்.
இவ்வாறு குணசேகரன் வரும் ஒரு நிமிஷத்துக்கு முன்னாடி அருண் வந்தால் கூட கல்யாணத்தை நடத்தி விடலாம் என ஆதிரை தனியாக அனைத்து பூஜைகளையும் செய்து வருகிறார். ஆனால் நேரம் ஆக ஆக ஆதிரை இதற்கு மேல் என்னால் இருக்க முடியாது அருண் வருவதாக தெரியவில்லை அண்ணன் இங்க வந்துட்டா என்ன நடக்குமோ எனவே நான் சாகப் போறேன் என ஓடுகிறார்.
நந்தினி, ரேணுகா, சக்தி என அனைவரும் அதிரையை பிடிக்கின்றனர் அனைவரும் பிள்ளைகளை விட்டுட்டு வந்திருக்கும் இப்படி செஞ்சா எப்படி எனக் கூறி சமாதானப்படுத்த பிறகு சக்தி இனிமேல் இங்கிருந்து கிளம்பி விடலாம் என கூறுகிறார் இவ்வாறு இவர்கள் கூறும் நேரத்தில் குணசேகரன் என அனைவரும் கோவிலுக்கு வந்து விடுகிறார்கள்.
குணசேகரன் வந்த கோபத்தில் ஆதிரையை பளார் பளார் என அறைய மறுபுறம் ஞானம் திட்டுகிறார் ஜான்சி ராணி அடிக்காத ஒரு குறையாக ஆதிரையை போட்டு உலுக்கி எடுக்கிறார். இவ்வாறு அனைவரும் அதிர்ச்சடைகிறார்கள் பிறகு ஜனனி இவ்வாறு இது அனைத்து பிளானுக்கும் நான் தான் காரணம் என வேகமாக பேசுகிறார்.
இதோடு இன்றைய எபிசோடு நிறைவடையும் நிலையில் இதனை அடுத்து பிடிவாதமாக ஆதிரையின் கழுத்தில் கரிகாலன் தாலியை கட்டிவிட ஜனனி, நந்தினி என அனைவரும் கத்துகிறார்கள் இவ்வாறு இது இனி வரும் எபிசோடில் ஒளிபரப்பாக இருக்கிறது.