சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் சுவாரஸ்யமான கதை அம்சத்துடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது எப்படியாவது ஆதிரை அருணின் திருமணத்தை நடத்தி விட வேண்டும் என்பதற்காக விசாலாட்சி மற்றும் மருமகள்கள் அனைவரும் போராடி வருகின்றனர். அந்த வகைகள் தற்போது விசாலாட்சியிடம் மருமகள் எப்படியாவது நீங்கள் தான் குணசேகரன் மற்றும் மற்றவர்களை சமாளித்து எங்களை அனுப்ப வேண்டும் என கூறுகிறார்கள்.
அப்படி விசாலாட்சியும் பயந்து தயங்கிக் கொண்டே செல்ல குணசேகரன் ஆதிரை பார்த்து அதற்குக்குள் கிளம்பி விட்டதாக அனைவரிடமும் சொல்கிறார். இதனை அடுத்து விசாலாட்சி அதிரை பிறக்கும் பொழுது வேண்டுதல் ஒன்று வேண்டிக் கொண்டதாகவும் அதனை தற்பொழுது நிறைவேற்ற வேண்டும் எனவும் கூறுகிறார்.
அதற்கு குணசேகரன் முகூர்த்த நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது நீ இந்த திருமணத்தில் இல்லை என்றால் எப்படி அப்புறம் சாகுற வரைக்கும் என்னுடைய மகள் திருமணத்தை பார்க்க முடியவில்லை என புலம்புவ என கூற அந்த நேரத்தில் ஜனனி அவங்க ஆதிரையை கோவிலுக்கு அழைச்சிட்டு போகணும்னு சொல்றாங்க எனக் கூற அதற்கு ஜான்சிராணி முகூர்த்த நேரம் வந்துடுச்சு யாராச்சும் கல்யாணம் நாலுல பரிகாரம் செய்வார்களா என கேட்கிறார்.
ரேணுகா நீங்க எப்படி செஞ்சீங்களோ அதே மாதிரி நாங்களும் தான் பரிகாரம் செய்வோம் எனக் கூறிவிட்டு இவர்களுடன் கரிகாலன் மற்றும் கதிரை அனுப்பி வைக்கிறார்கள். எப்படியாவது கதிரை கழட்டி விட வேண்டும் என்பதற்காக நந்தினி ஏதாச்சும் மாத்திரையை கண்ணில் கலந்து கொடுத்து விடலாமா என கேட்க அதற்கு ரேணுகா அப்படியே வாங்கி குடிச்சிடுவான் பாரு என கூற அப்பனா ஒரு ஐடியா சொல்லுங்க என கேட்கிறார்.
அதற்கு ஜனனி என்னிடம் ஒரு நல்ல ஐடியா இருக்கு என கூறுகிறார் பிறகு எப்படியோ கதிரை பிளான் போட்டு கழட்டி விட்டுட்டு கோவிலுக்கு செல்கிறார்கள். அங்கு அனைவரும் சாமி கும்பிட 108 முறை ஆதிரைக்கும் தனது திருமணம் நடக்க வேண்டும் என வேண்டிக்க என்று கரிகாலனிடம் கூறிவிட்டு அதிரையை ஜனனி, நந்தினி, ரேணுகா அனைவரும் அழைத்து செல்கிறார்கள்.
இது தெரியாத கரிகாலன் வேண்டிக் கொண்டிருக்கிறார் இவ்வாறு அதிரை தப்பித்திருக்கும் நிலையில் அருணுடன் திருமணம் நடைபெறுமா? என்ற எதிர்பார்ப்புடன் இந்த வாரம் ஒளிபரப்பாக இருக்கிறது. இவ்வாறு இவர்களுக்கு திருமணம் நடைபெறுமா அப்படி இல்லை என்றால் ஜீவானந்தம் ஏதாவது ட்விஸ்ட் வைப்பாரா என்பதை நான் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.