குடித்துவிட்டு கலாட்டா செய்யும் ஜான்சி ராணி, கரிகாலன்.! குணசேகரனுக்கே தண்ணி காட்டும் விசாலாட்சி.. எதிர்நீச்சல் சீரியல் இன்றைய எபிசோட்

erthir neechal
erthir neechal

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் தொடர்ந்து பல சுவாரசியமான எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது ஜீவானந்தம் கேரக்டரில் புதிதாக இந்த சீரியலின் இயக்குனர் களமிறங்கி இருக்கும் நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ஒளிபரப்பாகி வருகிறது.

அந்த வகையில் அப்பத்தாவின் கைரேகையை ஜீவானந்தம் எடுத்துக்கொண்ட நிலையில் அதிரையின் திருமணத்திலும் மிகப்பெரிய ட்விஸ்ட் இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்போது ஜான்சிராணி மற்றும் கரிகாலன் பயங்கரமாக குடித்துவிட்டு மண்டபத்தில் அனைவர் முன்னாடியும் போதையில் ஆடுகிறார்கள் இவர்களுடன் இணைந்து கதிரும் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்க கரிகாலன் வரம்பு மீறி ஆதிரை, ஜனனி மற்றும் நந்தினி ஆகியோர்களை வலுக்கட்டையாக pழுத்து அநாகரிகமாக நடந்து கொள்கிறார்.

இதனை எல்லாம் பார்த்த குணசேகரன் பெரிய தப்பு பண்ணிட்டோம் இது போன்ற ஒரு சம்மதத்தை வைத்திருக்கவே கூடாது என ஃபீல் பண்ணி புலம்புகிறார். இதனைக் கேட்டுக் கொண்டு பக்கத்தில் இருந்த ஞானம் நீங்க தானே தேடிப் பிடித்து இந்த மாப்பிள்ளை தான் வேணும்னு சொல்லிக்கிட்டு பேசி முடித்து இருக்கீங்க என்று குணசேகரன் நடிப்பிற்கு பதில் கூறுகிறார்.

பிறகு குணசேகரன் இருக்கட்டும் இதெல்லாம் ஆதிரை கல்யாணம் முடியும் வரை மட்டும்தான் அதன் பிறகு கரிகாலனை வீட்டோடு மாப்பிள்ளையாக வைத்துக் கொண்டு ஜான்சி ராணி நம்ம வீட்டு தெரு பக்கமே வராதபடி அடித்து விரட்டணும் என சொல்கிறார். இவ்வாறு இவர் இப்படி நினைக்க ஜான்சிராணி, அதிரை கரிகாலன் திருமணம் முடிந்தவுடன் குணசேகரின் சொத்தை எப்படியாவது ஆட்டையை போட்டு விட வேண்டும் என திட்டம் போடுகிறார்.

இந்த ஆதரையின் திருமணத்தில் ஜீவானந்தம் மிகப்பெரிய பிளானை போட்டு இருக்கிறார்.  மறுபுறம் குணசேகரனின் அம்மாவிடம் தயவு செய்து கூடிய சீக்கிரத்தில் ஆதிரை திருமணத்தை இதோட முடித்து விடுங்கள் இதற்காக என்ன பண்ணுவீங்களோ எங்களுக்கு தெரியாது உங்களுடைய மொத்த வித்தையும் பயன்படுத்தி எங்களை வெளியில் அனுப்பி வைக்க வேண்டும் இது உங்களுடைய பொறுப்பு என ஜனனி மற்றும் நந்தினி கூறுகிறார்கள்.

அதன்படி குலதெய்வம் கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த வேண்டும் என குணசேகரனிடம் அனைவரும் வந்து சொல்லும் பொழுது ஜான்சிராணி இது என்ன புதுசா இருக்கிறது என்று சொல்கிறார். அதற்கு ஆக்ரோஷமாக குணசேகரனின் அம்மா நிறுத்தடி கொஞ்சம் என்று பொங்கி எழுகிறார் இவ்வாறு இவர் கோபப்படுவதை பார்த்து ஜான்சி ராணி வாயடைத்து போய்விடுகிறார்.