சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது மிகவும் விறுவிறுப்பாக சூடு பிடிக்க தொடங்கியுள்ளது இதைதான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம் என்று சொல்லும் அளவிற்கு மாஸான எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருவதால் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து வருகின்றனர். அதாவது குணசேகரன் அப்பத்தாவை ஏமாற்றி 40% சொத்தை எழுதி வாங்கிக் கொண்ட நிலையில் இதனை அனைவருக்கும் தெரிய வைக்க வேண்டும் என ஜனனி போராடுகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது குணசேகரனுக்கு எதிராக ஜனனி மற்றும் மற்ற மருமகள்கள் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று ரேணுகா மாஸாக பேசி அவமானப்படுத்திய நிலையில் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாத குணசேகரன் என் பேச்சை கேட்கிறவங்க இங்க இருங்க இல்லாதவங்க வீட்டை விட்டு கிளம்புகள் என ஒரே வார்த்தையாக கூறி முடித்து விடுகிறார்.
மேலும் இவர் முக்கியமாக ஆதிரையை குறிப்பிட சொன்ன நிலையில் இது தேவைதான் என பலரும் கூறி வருகின்றனர் அதாவது குணசேகரன் மற்றும் மற்ற அண்ணன்களுடன் சேர்ந்துக் கொண்டு அண்ணிகளைத் தொடர்ந்து அவமானப்படுத்தி வந்தார். இப்படிப்பட்ட நிலையில் அப்பத்தாவின் மருத்துவ செலவுக்காக பணம் தேவைப்படுவதனால் ஈஸ்வரியின் சொத்து பத்திரத்தை வைத்து பணத்தை ரெடி செய்யலாம் என முடிவெடுத்திருக்கிறார்.
இவ்வாறு இதனை எடுத்த நேரத்தில் குணசேகரனிடம் அந்த 40% சொத்து உங்களுக்கு கண்டிப்பாக வராது என அனைவரும் முன்பும் சவால் விடுகிறார். இவ்வாறு ஜனனி சொல்வதைக் கேட்டு குணசேகரன் என்னம்மா சொல்ற என்னனனா சொல்லிட்டு போமா என கூறுகிறார்.
இதனை அடுத்து மறுபுறம் ஜனனி ஜீவானந்தம் யார் என தேட இருக்கிறார் இதன் மூலம் அனைத்து உண்மைகளையும் தெரிந்துக் கொண்டு குணசேகரனை ஒரு வழி பண்ணப் போகிறார். மேலும் இவ்வாறு அதிரையில் திருமண வாழ்க்கை கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் இதெல்லாம் அவருக்கு தேவை தான் என ஜனனி கடும் கோபத்தில் இருந்து வருகிறார்.