சன் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் எதிர்நீச்சல் இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தொடர்ந்து பல திருப்பங்கள் அரங்கேரி வருகிறது. மேலும் ஜனனி ஆக்ரோஷமாக குணசேகரன் உடன் மல்லுக்கட்டி வருகிறார். இதனால் மருத்துவமனையில் இவர்களுக்கிடையே சண்டை நிலவ அதனை மருத்துவர்கள் சமாதானப்படுத்தி விளக்கினர்.
அதாவது குணசேகரன் எப்படியாவது அப்பத்தாவின் சொத்தை வாங்கி விட வேண்டும் என்ற முடிவில் இருந்து வந்த நிலையில் தற்பொழுது தந்திரமாக பிளான் பண்ணி அந்த சொத்தை ஆட்டையை போட்டுள்ளான். சொத்து குணசேகரன் கைக்கு போகக்கூடாது என அப்பத்தா நினைத்த நிலையில் ஆனால் குணசேகரனிடம் அந்த சொத்து போனதால் மிகுந்த மனவருத்தத்திற்கு ஆளாகி சுயநினைவையில் இழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு இதனைப் பற்றி தெரிந்துக் கொண்ட குணசேகரன் அரசுடன் மருத்துவமனைக்கு செல்ல அப்பத்தாவை பார்க்க வேண்டும் என கூறுகிறார். எனவே ஜனனி அதெல்லாம் முடியாது என தைரியமாக சண்டை போடுகிறார். பிறகு ஒரு கட்டத்தில் ஆடிட்டர் தனியாக குணசேகரனை அழைத்து சென்று இதுதான் நமக்கு கிடைத்த நல்ல சான்ஸ் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அதாவது அப்பத்தா சுயநினைவு இல்லாத பொழுது அவரை தன் வயப்படுத்திக் கொண்டால் அவரிடம் இருந்து நமக்கு தேவைப்படும் கைரேகைகளை வாங்கிக் கொண்டு ரிஜிஸ்ட்ரேஷன் நல்லபடியாக செய்து கொள்ளலாம் என ஐடியா கொடுக்கிறார்.
எனவே இதன் காரணமாக குணசேகரன் டாக்டரிடம் சென்று அப்பத்தாவை நான் வேறு இடத்துக்கு அழைத்துக் கொண்டு போகிறேன் என கூற ஆனால் ஜனனி அது எல்லாம் முடியாது அப்பத்தாவை எங்கேயும் கொண்டு போக முடியாது நான் பாத்துக்குறேன் என கூறுகிறார். அதன் பிறகு குணசேகரன் அவளிடம் நயா பைசா கிடையாது எந்த ஒரு செலவாக இருந்தாலும் நான் தான் கொடுக்க வேண்டும் என்று டாக்டரை யோசிக்க வைக்கிறார்.
எனவே நாளைக்கு காலையில் வந்து என் அப்பத்தாவை நான் கூட்டிட்டு போகிறேன் என சொல்லிவிட்டு கிளம்புகிறார். இவ்வாறு குணசேகரன் பல பிளான் போட்டாலும் கண்டிப்பாக ஜனனி அப்பத்தாவை அனுப்பி வைக்க மாட்டார் என்று தெரிகிறது. மேலும் எப்படியாவது அப்பத்தா கண்விழித்து அனைத்து உண்மைகளையும் சொல்ல வேண்டும் என காத்து வருகிறார்.