சொத்தை மடக்குவதற்காக பலே பிளான் போட்ட குணசேகரன்.! ஆதிரையின் திருமணம் நடக்குமா.? மாட்டிக்கொண்டு தவிக்கும் குடும்பத்தினர்..

ethirnichal
ethirnichal

தற்பொழுது சன் டிவியில் நம்பர் ஒன் சீரியலாக இருந்து வரும் எதிர்நீச்சல் சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் மத்தியிலும் பேர் ஆதரவுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் டிஆர்பியில் முன்னணி வகித்து வரும் நிலையில் இவ்வாறு தற்போது இந்த சீரியலில் பல திருப்பங்கள் நிகழ்ந்துள்ளது.

அதாவது எதிர்நீச்சலில் குணசேகரனின் வில்லனாக நடித்து வரும் நிலையில் வீட்டில் இருக்கும் பெண்களை மரியாதை கொடுக்காமல் அடிமைத்தனமாக நடத்தி வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தங்கை ஆதிரை எஸ்கேஆர் தம்பியை காதலித்து வரும் நிலையில் ஆரம்பத்தில் இருந்தே இது குணசேகரனுக்கு பிடிக்கவில்லை. எனவே ஆதிரையின் திருமணம் நடைபெறுவதற்காக தனது சொத்தை எழுதித் தருவதாக கூறியிருந்தார்.

எனவே அப்பத்தாவும் சொத்து தருவதாக நிச்சயதார்த்தம் வரை சென்ற நிலையில் அங்கு அரசு கேட்ட கம்பெனி கையெழுத்து போட வைத்தார். இவ்வாறு குணசேகரன் தன்னுடைய சூழ்ச்சியினால் சொத்தையும் எழுதி வாங்கிக் கொண்ட நிலையில் இவரது தில்லாலங்கடி வேலையினால் அனைவரும் அதிர்ச்சடைகின்றனர். இந்நிலையில் குணசேகரன் கதிரை தனியாக அழைத்துச் சென்று ஆல்கஹால் குடிக்க வைக்கிறார் பிறகு குணசேகரன் மற்றும் கதிர் இருவரும் மருத்துவமனைக்கு செல்கின்றனர்.

அங்கு ஆடிட்டர் இவர்களுக்காக வெயிட் பண்ணிக்கொண்டு இருக்கின்றார். எனவே குணசேகரன் ஆடிட்டரிடம் அனைத்தும் சரியாக ரெடியா இருக்கிறதா எந்த பிரச்சனையும் வராதுல என கதிரை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு போய்விட்டார்கள். அங்கு கதிர்க்கு ஆல்கஹால் டெஸ்ட் எடுக்கப் போகின்றனர் ஏனென்றால் ஆல்கஹால் டெஸ்ட் எடுத்த பிறகு அதற்கான டெஸ்ட் ரிப்போர்ட்டில் நிச்சயதார்த்தம் நடந்த தேதியில் மாற்றி வாங்கிக் கொண்டு பிரச்சனை செய்யப் போகிறார்களாம்.

அதாவது போதையில் இருக்கும் பொழுது கதிர் கம்பெனியை எழுதி வாங்கிக்கொண்டு கொடுத்ததாகவும் எனவே சொத்து பத்திரம் செல்லாதபடி அரசு கொடுத்த சொத்தை மீண்டும் வாங்கிக் கொள்ள குணசேகரன் திட்டம் போட்டு உள்ளார். இவ்வாறு எஸ்கே lஆர் குடும்பத்தினர்கள் இதனால் கோபப்பட்டு ஆதிரையில் திருமணத்தினை தடுத்து நிறுத்துகிறார்கள்.

வேறு வழி இல்லாமல் ஆதிரை கரிகாலனை திருமணம் செய்து கொள்கிறார். இவ்வாறு இப்படி நிச்சயதார்த்தம் வரை சென்று ஆதியின் திருமணத்தை நிறுத்துவதற்கு முக்கிய காரணம் இதன் மூலம் அப்பத்தாவின் சொத்தை ஆட்டையை போட்டு விடலாம் என குணசேகரன் பலே பிளான் போட்டுவிடலான். இவ்வாறு இதனை எல்லாம் தெரிந்துக் கொண்டு ஜனனி அனைத்து பிரச்சினைகளையும் உடைத்து ஆதிரைக்கு எஸ்கேஆர் தம்பியுடன் திருமணத்தினை நடத்தி வைப்பாரா? என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.