40% சொத்தும் கிடைக்காமல், நினைத்தபடி ஆதிரையின் திருமணமும் நடக்காமல் நடுரோட்டிற்கு வர இருக்கும் குணசேகரன்.! ஜீவானந்தத்தை பிடிக்க ஸ்கெட்ச் போடும் கும்பல்.. டம்மி பீஸ் ஆன ஜனனி

ethir neechal
ethir neechal

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது ஆதிரையின் திருமணம் அருணுடன் நடைபெற இருக்கிறது மேலும் ஜீவானந்தம் எப்படிப்பட்டவர் என அனைவருக்கும் தெரியப்படுத்தும் வகையில் எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது.

தற்பொழுது ஜீவானந்தம் அப்பத்தாவின் கைரேகையை வைத்து சொத்துக்களை எழுதி வாங்கி இருக்கும் நிலையில் இவருடைய முழு டார்கெட்டும் எஸ்கேஆர் குடும்பத்தின் மேல் இருந்து வருகிறது. மேலும் அருணை வைத்து தான் அனைத்து கேம்ங்களையும் விளையாட உள்ளார். இதன் காரணமாக ஜனனி அதிரை அருணின் திருமணத்தை நடத்தி வைக்க இருக்கும் நிலையில் அதில் பல குளறுபடிகள் ஏற்பட உள்ளது.

மேலும் ஜனனியின் உண்மையான நண்பராக இருந்த கௌதம் நம்பிக்கை துரோகியாக இருக்க மாட்டார் அதே நேரத்தில் ஜீவானந்ததிற்கு விசுவாசியாக இருக்கவும் வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்து வருகிறார்.  இதனை அடுத்து அப்பத்தாவின் கைரேகையை வாங்க முடியவில்லை என்ற கடுப்பில் குணசேகரன் இருந்து வருகிறார்.

இவ்வாறு தோல்வினை அடைந்த நிலையில் இரண்டாவது ஆதிரை, கரிகாலன் திருமணம் நடக்க ஏற்பாடு செய்திருக்கும் நிலையில் கண்டிப்பாக அதுவும் நடக்காமல் இருக்க போகிறது. எனவே இதனைத் தாங்கிக் கொள்ள முடியாமல் குணசேகரன் கோபத்தின் உச்சத்தில் செல்ல இருக்கிறார்.  இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து ஒரு கும்பல் கௌதமை ஃபாலோ செய்து வருகிறார்கள் அதாவது ஜீவானந்தத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக போலீஸ்கள் இது போன்ற ஸ்கெட்ச் போட்டு உள்ளார்கள்.

இதனால் அருணை அழைத்துச் செல்லும் பொழுது ஜீவானந்தத்தை பற்றிய உண்மை பலருக்கும் தெரியவர இருக்கிறது. இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் அப்பத்தாவின் 40% சொத்தும் கிடைக்காமல் நினைத்தபடி ஆதிரை கரிகாலன் திருமணம் நடைபெறாமல் இரண்டுமே பெரும் தோல்வினை அடைந்ததால் குணசேகரன் என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. மேலும் இதன் மூலம் ஜீவானந்தம் நல்லவரா? கெட்டவரா? என்பதும் தெரிய வருகிறது.